புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக வந்திதா பாண்டே ஐஏஎஸ் நியமனம்.
தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் 3 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு
லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு புலனாய்வுப்பிரிவு ஐஜி பவானீஸ்வரி, லஞ்ச ஒழிப்புத்துறை ஐஜி/ இணை இயக்குனராக இடமாற்றம்.
காத்திருப்போர் பட்டியலில் இருந்த வந்திதா பாண்டே புதுக்கோட்டை எஸ்பியாக இடமாற்றம்
புதுக்கோட்டை எஸ்பி நிஷாபார்த்திபன் இடமாற்றாம். மத்திய அரசின் உளவுதுறை பணிக்கு செல்கிறார்
புதிய எஸ்பியாக வந்திதா பாண்டே நியமனம்.*
புதுக்கோட்டை
இந்திய காவல் துறையில் அதிரடிக்கு பெயர் பெற்றவர்தான் வந்திதா பாண்டே. கண்டிப்பான போலீஸ் அதிகாரி உத்தரப்பிரதேசம் அலகாபாத்தை சேர்ந்தவர் இந்த ஐபிஎஸ் அதிகாரி. தமிழகத்திற்கு இவர் மாற்றலாகி வந்தபோது அனைவரின் கவனத்தையும் திருப்பியவர்.தன் துறை நபர்கள் என்றெல்லாம் கரிசனம் காட்டாமல் காக்கிகளிடம் கண்டிப்பை காட்டியவர். தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பணியாற்றி மக்களிடம் நன்மதிப்பை நேரடியாக பெற்றவர். இவர் எடுத்த பல அதிரடிகளால் பலமுறை டிரான்ஸ்பர் செய்யப்பட்டவர். எத்தனை முறை டிரான்ஸ்பர் செய்யப்பட்டாலும், நேர்மையை கைவிடாதவர் வந்திதா.
சிவகங்கை சிறுமி ஒருவர் உயர் போலீஸ் அதிகாரிகள் மற்றும் விஐபி-க்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த விஷயம் தெரிந்தும், பாதிக்கப்பட்ட சிறுமியிடம், வாக்குமூலத்தை பெற்று அதை சட்டப்படி பதிவு செய்தவர். அதற்காக கரூருக்கு அவர் டிரான்ஸ்பர் செய்யப்பட்டது வேறு விஷயம். ஆனால், இந்த வழக்கின் விசாரணையில் மக்களிடம் நல்ல பெயரை பெற்றார் வந்திதா.கரூர் அன்புநாதன்
எனினும் இவர் பரபரப்பாக பேசப்பட்டது கரூர் அன்புநாதன் விவகாரத்தில்தான் 2016 சட்டமன்றத் தேர்தலின்போது ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவுக்காக அரசாங்க முத்திரையை போலியாக பதித்திருந்த ஆம்புலன்ஸில் கட்டுக்கட்டாகப் பணம் கடத்தி வாக்காளர்களுக்கு விநியோகம் செய்த குற்றச்சாட்டில் கைதானவர்தான் அன்புநாதன்.பணம்
அய்யம்பாளையம் அன்புநாதன் வீட்டில் ரெய்டு நடந்தபோது கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த ரெய்டை முன்னின்று நடத்தியவரே எஸ்பி வந்திதா பாண்டேதான். இதற்கும் அவருக்கு மேலிடத்தில் இருந்து அழுத்தம் தரப்பட்டது என்பதை மறுக்க முடியாது. வந்திதா பாண்டே ஐபிஎஸ் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு எஸ்பியாக இருந்து, பிறகு பொருளாதாரக் குற்றப்பிரிவு எஸ்பியாகவும் இடமாற்றம் செய்யப்பட்டார்.துணிச்சல்
அதாவது சம்மந்தமே இல்லாத துறை என்றாலும், நேர்மை காரணமாகவே தூக்கியடிக்கப்பட்டவர்தான் வந்திதா. இன்னும் இதுபோன்ற ஏராளமான துணிச்சல் காரியங்களை நிகழ்த்தி உள்ள நிலையில், வந்திதா வீட்டில்தான் இருந்து ஒரு இனிப்பான செய்தி வந்துள்ளது.. வந்திதாவுக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளதாம். இரண்டுமே ஆண் குழந்தைகள்தான். வைனிஷ் & வைதித் என்று அந்த அழகான குழந்தைகளுக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது.குழந்தைகள்
வந்திதாவுக்கு ஏற்கனவே ஒரு ஆண் குழந்தை உள்ளது.இப்போது இரட்டை ஆண் குழந்தைகளும் பிறந்துள்ளன
‘வி’ என்ற எழுத்திலேயே இவர்கள் அனைவரின் பெயரும் ஆரம்பமாவதால், ‘வி’ குடும்பம் என்று பதிவிட்டு, குழந்தைகளின் போட்டோவையும் ட்விட்டரில் ஷேர் செய்துள்ளார் வந்திதா. இதையடுத்து, வந்திதா குடும்பத்தினருக்கு காவல்துறையினர் தங்கள் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.