அறந்தாங்கி வழியாக இயக்கப்பட இருக்கும் செகந்திராபாத்-ராமேஸ்வரம் சிறப்பு விரைவு ரயிலுக்கான முன்பதிவு தொடங்கியது!

6056

திரைப்படத்தில் திருப்புமுனை இருப்பது போல்
செகந்திராபாத் – இராமேஸ்வரம் புதிய சிறப்பு வண்டிக்கும் ( பழைய செகந்திராபாத் – இராமேஸ்வரம் சிறப்பு வண்டிக்கும் ) எந்த ஒரு தொடர்பும் இல்லை என்று தெற்கு இரயில்வே அதிகாரப்பூர்வமாக அறிவித்து பெரும் திருப்புமுனையை உண்டாக்கியுள்ளது தெற்கு ரயில்வே.


முன்னர் பழைய தொடர் வண்டி சேவை வேறு பாதைகளுக்கு திருப்பி விடப்படுவதாக அறிவித்தனர். இதனால் ஒருபுறம் வரவேற்பு வந்தாலும் மற்றொருப்புறம் எதிர்ப்பு கிளம்பியது. சமூக வலைதளங்களில் காரசாரமாக விவாதிக்கப்பட்ட இந்தப் பிரச்சனை ! அப்படியே மிகப்பெரும் திருப்புமுனையை வைத்தது தெற்கு ரயில்வே


தொடர்வண்டி எண் : 07685/86 / செகந்திராபாத் – இராமேஸ்வரம் சிறப்பு வண்டி ( மானாமதுரை , காரைக்குடி ,புதுக்கோட்டை ,திருச்சி , மாயவரம் ( மயிலாடுதுறை ) , விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பதி ) வழியாக இயக்கப்பட்ட வண்டி.

தொடர்வண்டி எண் : 07695/96 / செகந்திராபாத் – இராமேஸ்வரம் சிறப்பு வண்டி ( மானாமதுரை , காரைக்குடி , அறந்தாங்கி, திருத்துறைப்பூண்டி , திருவாரூர் , மயிலாடுதுறை ( மாயவரம் ) , விழுப்புரம் , சென்னை , குன்டூர் , விஜயவாடா ) வழியாக இயக்கப்படவள்ள வண்டி.

அதாவது பழைய சிறப்பு வண்டி சேவைக்கும் , புதிய சிறப்பு வண்டி சேவைக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என்று அறிவித்துள்ளனர். காரணம் ஒரே எண்களில் வெவ்வேறு பாதைகளுக்கு முன்பதிவு தொடங்கப்பட்டால் குழப்பம் ஏற்பட்டு விடும் என்பதற்காக தொடர் வண்டியின் என்னை மாற்றி உள்ளனர்.



வரும் 30 ஜூலை 2022 , காலை 8 மணி முதல் இந்த வண்டி எண் : 07695/96 / செகந்திராபாத் – இராமேஸ்வரம் வண்டிக்கான முன்பதிவு தொடங்கும் என்று கூறியுள்ளனர்.

சென்னை கடற்கரை இரயில் நிலையத்திற்கு தொழில்நுட்பம் நிறுத்தம் வழங்கப்பட்டுள்ளது.



இதற்கு முன்னர் இருந்த பழைய சிறப்பு தொடர்வண்டி சேவையின் போது சிவகங்கையில் நிறுத்தம் வழங்கப்படவில்லை. அனைவரும் மானாமதுரையில் ஏறி சென்றனர் . மின்னஞ்சல் மூலம் பெரும் முயற்சியினால் அந்த வண்டிக்கு நிறுத்தம் கிடைத்தது. தற்போது சொல்லாமலேயே நிறுத்தம் வழங்கி உள்ளனர்

அதனால் உங்கள் முன்பதிவை இன்று முதல் தொடங்குங்கள்
புதிய பாதை!
புதிய பயணம்!

இனிய பயணங்கள் !