புதுக்கோட்டை – தேர் கவிழ்ந்து விபத்து 10 பேர் காயம்

1725

புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோகர்ணம் பிரகதாம்பாள் கோயில் தேரோட்டத்தில் தேர் கவிழ்ந்து விபத்து;10-க்கும் மேற்பட்டோர் காயம்.வடத்தை வேகமாக இழுத்ததால் தேர் கவிழ்ந்து விபத்து என தகவல்

புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோகர்ணம் பிரகதாம்பாள் கோயில் தேரோட்டம் இன்று நடைபெற்றது. இந்த திருவிழாவில் ஏராளாமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில், தேர் நிலையத்தில் இருந்து இழுக்க தொடங்கிய சிறிது நேரத்தில் திடீரென முன்பக்கமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனைப் பார்த்த பொதுமக்கள் அலறி அடித்தபடி ஓடினர். இந்த விபத்தில் தேருக்கு அருகில் நின்ற 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.



உடனே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தேரின் வடத்தை வேகமாக இழுத்ததால் தேர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளன. மேலும் தேர் விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தேரோட்டத்தின்போது தேர் கவிழ்ந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சுதாரிக்காத அறநிலையத்துறை

2019 ஆண்டு விபத்தின் போது ஐ லவ் புதுக்கோட்டை முக நூல் பக்கம் சுட்டிகாட்டிய செய்தி .

கடந்த 2019 ஆம் ஆண்டில் இது போன்ற சம்பவம் நடந்தும் மீண்டும் இன்று நடைபெற்ற தேர் திருவிழாவின் போது விபத்து நடைபெறாமல் தவிர்த்து இருக்கலாம்.. புதுக்கோட்டை அறநிலையத்துறை அதிகாரிகளின் விழிப்புடன் கவனித்து இருந்திருந்தால் விபத்து தவிர்க்கப்பட்டிருக்கும்