சதுரங்க நடன சித்தரிப்பு வைரலாகும் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகத்தின் குறும்படம்

1094

புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் சார்பில் தயாரிக்கப்பட்ட செஸ் ஒலிம்பியாட் விளம்பர வீடியோ, சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இரு அரசர்களிடையேயான போர்க்களக் காட்சியை உருவகப்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ள இந்த வீடியோவுக்கு ‘சதுரங்க நடன சித்தரிப்பு’ எனப் பெயரிடப்பட்டது.

செஸ் பலகையில் செவ்வியல் மற்றும் கிராமிய நடன அம்சங்களுடன் மல்யுத்தக் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. இறுதியில் மீசை முறுக்கிய மன்னரை, தனது வாள் வீச்சுத் திறனால் ‘செக்’ வைத்து நிறுத்துகிறார் எதிரணியின் ராணி. உரையாடல் எதுவுமின்றி பின்னணி இசையுடன் இந்த வீடியோ தயாரிக்கப்பட்டுள்ளது.

சுமார் 3.38 நிமிடங்கள் கொண்ட இந்த வீடியோ, தமிழக முதல்வரின் அதிகாரப்பூர்வ முகநூல் மற்றும் ட்விட்டர் பக்கங்களிலும் பகிரப்பட்டுள்ளன.

நேற்று முன்தினம் இரவு பதிவேற்றம் செய்யப்பட்ட அந்த வீடியோவை, ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். கலைத் துறையில்ஆர்வம் கொண்ட புதுக்கோட்டை ஆட்சியர் கவிதா ராமுவின் முயற்சியில், இந்த வீடியோவை குறும்படங்களில் நிபுணத்துவம் கொண்ட குழுவினர் படமாக்கியுள்ளனர்.

‘செஸ் போர்’ வீடியோ உருவான விதம்:

இதில், தமிழர்களின் வீரம் சார்ந்த கலைகள் மூலம் சதுரங்க விளையாட்டில் காய்கள் எவ்வாறு நகர்த்தப்படுகின்றன என்பதை விறுவிறுப்பாகவும், வீரத்தை மெய்ப்பிக்கும் வகையிலும் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த வீடியோ தற்போது அதிகமான பார்வையாளர்களை கவர்ந்ததுடன், இதில் நடித்துள்ள கலைஞர்களுக்கு பாராட்டுகளும் குவிந்து வருகிறது.



44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரால் வீடியோ ஒன்று தயாரிக்கப்பட்டு அது முதல்வரால் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமுவி அளித்த பேட்டியில்

புதுக்கோட்டை ஆட்சியர் கவிதா ராமு

புதுக்கோட்டை ஆட்சியர் கவிதா ராமு
“செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக வித்தியாசமாக ஒரு வீடியோ தயாரிக்க வேண்டும் என்று நினைத்தேன். அதற்காக தமிழகம் முழுவதும் இருந்து ஆர்ட்டிஸ்ட்களை பார்த்து பார்த்து தேர்வு செய்தேன். எனக்கு தெரிந்த 2 நல்ல ஆர்ட்டிஸ்ட்களுடன் சேர்த்து, பரதநாட்டியம், பொய்க்கால் குதிரை, தெருக்கூத்து, மல்யுத்தம், சிலம்பம் போன்ற கலைகள் சார்ந்த 32 கலைஞர்கள் இதில் இடம்பெற்றிருக்கின்றனர்.