பொன்னமராவதி ஜுலை 23
*501 பெண்கள் கலந்துகொண்ட திருவிளக்கு பூஜை இரண்டு ஆண்டுகளுக்குப் பின்பு நடத்தப்பட்டது ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்*
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி உள்ள பாலமுருகன் திருக்கோவில் ஆடி கிருத்திகை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடத்தப்பட்டது இரண்டு ஆண்டுகளுக்கு பின்பு திருவிழாக்கு பூஜை நடைபெற்றதால் சுமார் 501 பெண்கள் தங்கள் வீடுகளிலிருந்து குத்துவிளக்கு எடுத்து வரப்பட்டு கோவிலில் உள்ள சுவாமி முன்பு வைத்து விளக்கேற்றி சிவாச்சாரியார் பூஜிக்க அவரைத் தொடர்ந்து 501 பெண்கள் மந்திரங்களை பின் தொடர்ந்து கூறினர் இரண்டு ஆண்டுகள் நடைபெறாத நிலையில் இந்த ஆண்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றதால் ஏராளமான பெண்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் விழா ஏற்பாடுகளை பாலமுருகன் திருக்கோயில் நிர்வாகிகள் காமராஜ்,சதாசிவம் ஆகியோர் செய்திருந்தனர்
Credit – Ar.சுதாகரன்