தமிழக காவல்துறை வேலைவாய்ப்பு! 3552 காலிப்பணியிடங்கள்

340

தமிழகத்தில் 2-ம் நிலை காவலர் பணிகளுக்கு வரும் 7-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என சீருடை பணியாளர் தேர்வாணையம் தெரிவித்து உள்ளது.

தமிழக காவல்துறையில் உள்ள 3,552 இரண்டாம் நிலைக் காவலர் பணியிடங்களுக்கு, வருகின்ற ஜூலை 7-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ் நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமத்தின் தலைவரும், டிஜிபியுமான சீமா அகர்வால் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழக காவல்துறையில் 3,552 இரண்டாம் நிலைக் காவலர் பணியிடங்கள் காலியாக உள்ளது. அதில், ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்புக் காவல் படை, இரண்டாம் நிலை சிறைக் காவலர், தீயணைப்பாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு ஜூன் 30-ம் தேதி வெளியிடப்படுகிறது.

காவல்துறையில் 2180 மற்றும் புலனாய்வுத் துறையில் 1091, 161 சிறை வார்டர் மற்றும் 120 தீயணைப்பு வீரர் உட்பட தமிழ்நாடு காவல்துறையில் மொத்தம் 3,552 காலியிடங்களை TNUSRB அறிவித்துள்ளது. தமிழ்நாடு காவல்துறை எழுத்துத் தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகுதி வரம்பு:
கல்வித் தகுதி: விண்ணப்பதாரர் 10ஆம் வகுப்பு / SSLC தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள் மற்றும் அதற்கு மேல் கல்வித்தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள்.

வயது வரம்பு: ஜூலை 1, 2022 தேதியின்படி விண்ணப்பதாரர் 18 முதல் 26 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். ஒதுக்கப்பட்ட பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு தளர்த்தப்பட்டுள்ளது. இது குறித்த மேலும் தகவலுக்கு இங்கே கிளிக் செய்வதன் மூலம் விண்ணப்பதாரர் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடலாம்.

தேர்வு செயல்முறை:

TNUSRB தேர்வை மூன்று கட்டங்களாக நடத்தும்: எழுத்துத் தேர்வு (தமிழ் மொழித் தகுதித் தேர்வு + முதன்மைத் தேர்வு), உடல் திறன் தேர்வு மற்றும் சிறப்பு மதிப்பெண்கள். எழுத்துத் தேர்வு, உடல் திறன் தேர்வு மற்றும் NCC, NSS, Sprots/Games சிறப்பு மதிப்பெண்கள் ஆகியவற்றில் பெற்ற மொத்த மதிப்பெண்களின் அடிப்படையில் தற்காலிகத் தேர்வுப் பட்டியல் வரையப்படுகிறது.

தேர்வு கட்டணம்:  மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தேர்வுக் கட்டணமாக ரூ.130 செலுத்த வேண்டும். தேர்வு கட்டணத்தை விண்ணப்பதாரர் ஆன்லைனில் மட்டுமே செலுத்த வேண்டும்.

எப்படி விண்ணப்பிப்பது? இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் ஜூலை 7 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை TNUSRB-யின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnusrb.tn.gov.in மூலம் மட்டுமே விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க முடியும். மற்ற வழிகளில் விண்ணப்பிக்கும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது. தேர்வுக்கான அனுமதி அட்டை விரைவில் இணையதளத்தில் பதிவேற்றப்படும்.