68வது தேசிய விருதுகள் சூரரைப் போற்று’ படத்துக்கு 5 விருது

468

68வது தேசிய விருதுகள்

சிறந்த நடிகர்களாக விருது பெறவிருக்கும் தானாஜி படத்துற்காக அஜய்தேவகன் மற்றும் சூறரைப்போற்று சூர்யா அவர்களுக்கு வாழ்த்துகள்…

இவ்விருதுடன் சேர்த்து மொத்தம் மூன்று தேசிய விருதுகளுடன் மம்முட்டி, கமல் பெற்ற எண்ணிக்கையை சமண் செய்கிறார் அஜய் தேவ்கன்

4 விருதுகளுடன் பல வருடங்களாக முன்னணியில் இருக்கும் அமித்தாப் பச்சனின் கணக்கை இனி யார் சமண் செய்யப்போகிறார்கள் என்பது தான் அடுத்த எதிர்பார்ப்பு

சிறந்த படம், நடிகர், நடிகை, திரைக்கதை, பின்னணி இசை என 5 தேசிய விருதுகள் பெற்று எண்ணிக்கையில் டைரக்டர் பரதன் இயக்கிய தேவர்மகனை சமண் செய்கிறது சூறரைபோற்று… ஆடுகளம், கண்ணத்தில் முத்தமிட்டால் படங்களுக்கு கிடைத்தவை மொத்தம் 6… பல வருடங்களாக ஒரு படத்திற்கு அதிக தேசிய விருதுகள் பெற்றிருப்பது அமிர்கான் நடித்து அஷுடோஷ் இயக்கிய லகான் படம். மொத்தம் 8

தமிழில் 1990ல் தணிக்கையான சிவக்குமார் நடித்த மறுபக்கம், 2007ல் தணிக்கையான பிரகாஷ்ராஜ் நடித்த காஞ்சிவரம் படங்களுக்கு அடுத்து மூன்றாவதாக பெஸ்ட் பீச்சர் ஃபிலிம் கேட்டகிரியில் 2020ல் தணிக்கையான சூர்யாவின் சூறரை போற்று தான்… மொத்தம் மூன்றே படங்கள் தான் இதுவரை…

இயக்குனரின் சிறந்த டெப்யூ படமாக தேர்வாகியுள்ள மண்டேலாவின் இயக்குனர் மடோன் அஸ்வின் அவர்களுக்கு வாழ்த்துகள் மேலும் சிறந்த வசனங்களுக்கான தேசியவிருதும் அதே படத்திற்காக அவருக்குத்தான், அவரின் அடுத்த படம் சூப்பர்ஸ்டாரின் படப்பெயரான மாவீரன், சிவகார்த்திகேயன் நடிக்கிறார்… எதிர்பார்ப்புகள் உச்சம் பெறும்…

சிறந்த நடிகர் : சூர்யா (சூரரைப் போற்று), அஜய்தேவ்கன் (தன்ஹாஜி: அன்சங் வாரியர்)

சிறந்த நடிகை : அபர்ணா பாலமுரளி (சூரரைப் போற்று)

இயக்குநர்: சச்சிதானந்தன் (அய்யப்பனும் கோஷியும்)

சிறந்த தமிழ்ப் படம்: சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்

தெலுங்கு திரைப்படம்: கலர் போட்டோ

மலையாளம்: திங்களாழ்ச்ச நிச்சயம்

கன்னடம்: டோலு

இந்தி: தூள்சிதாஸ் ஜூனியர்

சண்டை இயக்கம்: ராஜசேகர், மாஃபியா சசி, சுப்ரீம் சுந்தர் (அய்யப்பனும் கோஷியும்).

நடன இயக்குநர்: சந்தியா ராஜு (நாட்டியம்- தெலுங்கு)

பாடலாசிரியர்: மனோஜ் முண்டாசீர் (சாய்னா – இந்தி)

இசை அமைப்பாளர் (பாடல்கள்): தமன் (அலா வைகுந்தபுரம்லோ – தெலுங்கு)

பின்னணி இசை: ஜி.வி.பிரகாஷ்குமார் (சூரரைப் போற்று)

எடிட்டிங்: கர் பிரசாத் (சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்)

திரைக்கதை: ஷாலினி உஷா நாயர், சுதா கொங்கரா (சூரரைப் போற்று)

வசனம்: மடோன் அஸ்வின் (மண்டேலா)

ஒளிப்பதிவு: சுப்ரதிம் போல் (அவிஜாத்ரிக்)

பின்னணிப் பாடகி: நஞ்சம்மா (அய்யப்பனும் கோஷியும்)

பாடகர்: ராகுல் தேஷ்பாண்டே (மி வசந்த்ராவ்- மராத்தி)

சிறந்த ஒலிப்பதிவு: விஷ்ணு கோவிந்த்,  ஷங்கர் (மாலிக், மலையாளம்)

குழந்தை நட்சத்திரம்: அனிஷ் மங்கேஷ் கோசவி (தக் தக் -மராத்தி)

துணை நடிகர்: பிஜு மேனன் (அய்யப்பனும் கோஷியும்)

துணை நடிகை: லட்சுமி பிரியா சந்திரமெளலி (சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்)

பிரபலமான திரைப்படம்: தன்ஹாஜி: அன்சங் வாரியர்

அறிமுக இயக்குநர்: மடோன் அஸ்வின் (மண்டேலா)

சிறந்த திரைப்படம்: சூரரைப் போற்று

சென்ற வருடம் 2019 விருதுகளுக்காக மகேஷ்பாபுவின் மஹரிஷிக்கு National Film Award for Best Popular Film Providing Wholesome Entertainment கிடைத்தது அதனால் இந்த வருடம் 2020க்காக விஜயின் மாஸ்டருக்கு எதிர்பார்த்தேன்… மாறாக தானாஜி தட்டி சென்றது…



சூறரைப்போற்றுவிற்காக சிறந்த இசையமைப்பு (பின்னணி இசை) ஜீவி பிரகாஷ் மற்றும் அலா வைகுண்டபுரம்லோவில் சிறந்த இசையமைப்பு (பாடல்கள்) தமண் அவர்களும் தேசிய விருதிற்காக தேர்வாகியுள்ளனர்… அவர்களுக்கு வாழ்த்துகள்… மெளனம் பேசியதே, 7G, ராம், புதுப்பேட்டை, பருத்திவீரன், பேரன்பு என யுவனுக்கு எப்போது தான் கிடைக்கும் என்று பார்த்தால் அவர் 2020ல் ரெக்கார்டிங்கே செய்யவில்லை. அவர் தான் அதிக யூட்யூப் வீயூவ்ஸ் கொண்ட தமிழ்ப்பாடலுக்கு இசையமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது (ரவுடி பேபி).

சிறந்த பாடலாசிரியராக பரினீதீ சோப்ரா சாய்னா நெஹ்வாலாக நடித்த சாய்னா படத்திற்காக மனோஜ் முன்ட்டாஷிர் அவர்களுக்கு கிடைத்திருக்கிறது இவர் தான் அக்‌ஷய் நடித்த கேசரி படத்தில் தன் பாடல் “தேரி மிட்டி” க்கு எந்த அவார்டும் கிடைக்கவில்லை என் வாழ்நாள் முழுவதும் நான் யோசித்தாலும் அப்படி ஒரு பாடல் என்னால் எழுத முடியாது எனவே இனி அவார்ட் ஷோக்களில் கலந்து கொள்ள மாட்டேன் என்றவர் இந்த அவார்ட் ஷோவில் கலந்து கொள்வாரா என்று பார்ப்போம்…



மேலும் நம் ஐயப்பனும் கோஷியும் 4 விருதுகள்… சிறந்த துணை நடிகர் பிஜு, சிறந்த டைரக்டர் சச்சி, சிறந்த பாடகி நஞ்சியம்மா (கலக்காத்தா சந்தனமேர), சிறந்த ஸ்டன்ட் மாஃபியா சசி, அந்த செருப்பை கழற்றி நெஞ்சில் மிதக்கும் சீன் என இன்னும் பல சீன்களுடன் இந்த படம் பார்த்த பொழுதே இந்த அவார்டுகள் இவரிவர்க்கு என்று சாமானியர்களே கணித்திருப்பார்கள்

சிறந்த பிராந்திய மொழிப்படங்களில் தமிழில் விருது பெற்ற சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படக்குழுவினர்க்கும் வாழ்த்துகள்..இந்த படத்திற்காக சிறந்த துணை நடிகையாக லக்ஷ்மி ப்ரியா தேர்வாகியுள்ளார். எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் இந்த படத்தின் எடிட்டிங்கிற்காக தேசிய விருது பெறுகிறார்… இத்துடன் சேர்த்து அவர் வாங்கிய தேசிய விருதுகள் மொத்தம் ஒன்பது…

ஏதோ ஒரு வகையில் பந்தையம் அடிக்கும் என எதிர்பார்த்தவைகள் – டிரான்ஸ், வரனே ஆவஷ்யமுண்டு, தில் பெச்சாரா, தப்பட், சப்பக், குஞ்சன் சக்சேனா, ஷகுந்தலாதேவி, அந்தகாரம், கப்பேலா

மேலும் திரைத்துறையின் உயரிய விருதான தாதாசாகிப் பால்கேவினை 2019 க்காக சென்ற வருடம் திரு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தட்டி சென்றார் அதற்கு முந்தய வருடம் அமிதாப்… இந்த வருடம் அந்த ரேசில் தர்மேந்திரா, ராஜேஷ் கண்ணா, ரிஷிகபூர், மம்முட்டி, மோகன்லால், சுரேஷ்கோபி, சிரஞ்சீவி, கமல் போன்ற ஹீரோக்களும் உள்ளனர் மேலும் வேறு கேட்டகிரி முன்னணி திரைத்துறையினரும் உள்ளனர் பார்க்கலாம் யாருக்கு கிடைக்கிறது என்று ❤