தமிழ்நாடு மின்சார கட்டணங்கள் உயர்வு: அமைச்சர் செந்தில் பாலாஜி

432

முதல் 100 யூனிட் மின் பயன்பாட்டுக்கு எந்த மாற்றமும் இல்லை; 200 வரை பயன்படுத்துபவர்களுக்கு ₹27.50 கூடுதலாக செலுத்தும் வகையில் கட்டண மாற்றம்

மாதம் 300- 400 யூனிட் பயன்படுத்துவோருக்கு மாதம் ₹147.50 அதிகரிக்க பரிசீலனை – அமைச்சர் செந்தில் பாலாஜி

‘வீட்டு உபயோக மின் கட்டணம் 2,000 ரூபாய்க்கு மேல் இருந்தால், இனி ஆன்லைனில் செலுத்துவது கட்டாயம் ஆக்கப்படும்.’ – மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு

தமிழகத்தில் பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் மின் கட்டணங்கள் உயர்த்தப்படவுள்ளதாக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

வீட்டு மின் இணைப்புக்கான 100 யூனிட் இலவச மின்சாரத்தில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை எனவும் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழகத்தில் மின் கட்டணங்கள் உயரவுள்ளன. 42 சதவிகித வீடு மற்றும் குடிசைக்கான மொத்த மின் கட்டணத்தில் மாற்றமில்லை.

பிற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகத்தில் மின் கட்டணம் குறைவாகவே உள்ளது. மத்திய அரசின் நிபந்தனைகளை ஏற்கும் நிலைக்கு தமிழக மின்சார வாரியம் தள்ளப்பட்டுள்ளது.

ஒரு வீட்டுக்கு ஒரு மின் இணைப்பு திட்டம் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. 100 யூனிட் மின்சாரம் வேண்டாம் என நுகர்வோர் எழுதிக்கொடுக்கும் திட்டமும் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

தமிழகத்தில் மின்கட்டணம் உயர்த்தப்படுவதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது:

கடந்த 10 வருடங்களில் மின்சார துறையில் கடன் ரூ.12,647 கோடி உயர்ந்துள்ளது. மின் கட்டணத்தை உயர்த்தவில்லை என்றால் மானியத்தை நிறுத்துவோம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அடித்தட்டு மக்கள் பாதிக்கப்படாத வகையில் மின்கட்டணத்தை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 100 யூனிட் வரை மின்சாரம் கட்டணம் இல்லை. 42 சதவீத மின் இணைப்பாளர்களுக்கு கட்டணங்களில் மாற்றம் இல்லை.

2 மாதங்களில் 200 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு மின் கட்டணங்களை உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. அதன்படி 2 மாதங்களில் 200 யூனிட்கள் வரை பயன்படுத்துபவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.27.50 உயர்த்தப்படும்.

201 யூனிட் முதல் 300 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு மாதம் ஒன்றிற்கு ரூ.72.50 கட்டணத்தை உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

2 மாதங்களில் 301 முதல் 400 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு ரூ.147.50 வரை கட்டணம் உயர்த்த பரிசீலனை செய்யப் படுகிறது. இரண்டு மாதங்களுக்கு மொத்தம் 500 யூனிட்கள் வரை மின்சாரத்தை பயன்படுத்துவோருக்கு ரூ.297.50 பைசா கட்டணம் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

2 மாதங்களில் 501 யூனிட் முதல் 600 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு ரூ.155 வரை உயரும். 2 மாதங்களில் 601 யூனிட் முதல் 700 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு ரூ.275 கட்டணம் உயரும்.

விசைத்தறிகளுக்கு 750 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும். மின்கட்டண ஒழுங்கு முறை ஆணையத்திடம் கட்டண உயர்வு விபரம் ஒப்படைக்கப்பட உள்ளது. இதன்பின் மின் கட்டணம் உயர்த்தப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.