15 ஆண்டுகளாக குப்பை கிடங்காக இருந்த கனரா வங்கி சந்து
அதிரடி நடவடிக்கையின் மூலம் ஒரே நாளில் சுத்தப்படுத்தி மரக்கன்றுகளை வைத்து அசத்திய திமுக கவுன்சிலர்
புதுக்கோட்டை நகர பொதுமக்கள் குறிப்பாக கீழராஜ வீதியில் இருந்து கீழே இரண்டாம் விதி பெருமாள் கோயில் மார்க்கெட் காமராஜபுரம் போஸ் நகர் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்கள் கனரா வங்கி சந்து வழியாக தான் கடந்து செல்வார்கள்
ஆனால் இந்த சந்து வழியாக செல்லும் பொழுது அங்கு கொட்டிக் கிடக்கும் குப்பைகளால் மூச்சை இறுகப் பிடித்துக் கொண்டு தான் கடப்பார்கள்
கீழ ராஜவீதி மற்றும் கீழ இரண்டாம் வீதி பகுதிகளில் குவியும் குப்பைகளை இங்குதான் மலை போல் குவித்து வைப்பார்கள் மேலும் அந்தப் பகுதியில் உள்ள திருமண மண்டபங்கள் உணவு நிறுவனங்கள் காய்கறி கடைகள் ஆகியவற்றில் மீதமாகும் கழிவுகளை இங்குதான் கொட்டுவது வழக்கம்
ஆகையால் இந்த பகுதி எப்பொழுதும் தூர்நாற்றம் வீசியவாறு காணப்படும் இது அந்த பகுதியில் உள்ள பலருக்கும் இலவசமாக நோய் பரப்பும் இடமாக இருந்து வந்தது சமீபத்தில் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற அப்பகுதி திமுக கவுன்சிலர் கார்த்திக் மெஸ் மூர்த்தி அவர்களின் கவனத்திற்கு சென்றவுடன் அந்த இடத்தை அழகாக சுத்தப்படுத்தி அந்த பகுதி முழுவதும் பூக்கன்று மற்றும் மரக்கன்றுகளை நட்டு தடபுடலாக பூங்காவாக மாற்றி விட்டார்
முன்னதாக நகராட்சி தலைவர் திலகவதி செந்தில் அவர்கள் தலைமையில் குப்பைகளை அப்புறப்படுத்தி அந்த இடத்தை அழகாக மீட்டெடுத்து சந்தின் ஓரமாக சாலையோர பூங்கா ஒன்றை அமைத்து இந்த பகுதியில் யாரும் கழிவுகளை கொட்ட கூடாது என வாசகங்களுடன் காவலர் ஒருவரையும் நியமித்துள்ளார்
மேலும் பகுதியில் குப்பை கொட்ட வருபவர்களிடம் தங்களது நிறுவனங்கள் மற்றும் வீடுகளுக்கு முன்பாகவே குப்பைகளை வைத்திருங்கள் நகராட்சியின் குப்பை சேகரிக்கும் வாகனம் வந்தவுடன் அதில் கொட்டி விடுங்கள் என ஆலோசனைகளையும் வழங்கி உள்ளார்
இந்த அதிரடி மாற்றம் தான் அந்த பகுதி பொதுமக்கள் வணிகர்கள் மற்றும் அந்த சந்தை கடந்து செல்லும் பாதசாரிகள் உள்ளிட்ட அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர்