புதுக்கோட்டை மாவட்டம்
தொல்லியல் கழகத்தின் 30ஆம் ஆண்டு கருத்தரங்கம் 16.07.2022 மற்றும் 17.07.2022 ஆகிய நாட்களில் நடைபெறவுள்ளது.
பொதுமக்கள் பார்வையிட்டு பயன்பெறலாம்
மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கவிதா ராமு, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
தொல்லியல் கழகத்தின் 30ஆம் ஆண்டு கருத்தரங்கம் 16.07.2022 மற்றும் 17.07.2022 ஆகிய நாட்களில் புதுக்கோட்டை கற்பக விநாயகா திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்ச்சியில் தொல்லியல் கழகத்தின் 30ஆம் ஆண்டு கருத்தரங்கம், ஆவணம் ஆய்விதழ் வெளியீடு, புதுக்கோட்டை சிறப்பு தொல்லியல் மலர் வெளியீடு ஆகிய நிகழ்வுகள் நடைபெறவுள்ளது.
மேலும் தொல்லியல் ஆய்வில் அரும்பங்காற்றிய நபர்களுக்கு வாழ்நாள் சாதனை விருது வழங்கப்பட்டு, தொல்லியல் மற்றும் நாணயவியல் கண்காட்சியும், விவசாய மக்கள் பயன்பெறும் வகையில் பாரம்பரிய நெல் கண்காட்சியும் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்ச்சிகளில் மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் அவர்கள் மாநாட்டை தொடங்கி வைத்தும், மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர் அவர்கள், மாண்புமிகு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் அவர்கள் ஆகியோர் தொல்லியல் மற்றும் நாணயவியல் கண்காட்சியை தொடங்கி வைத்தும் சிறப்பு செய்யவுள்ளார்கள்.
இந்நிகழ்ச்சியில் மூத்த தொல்லியல் அறிஞர்கள் பங்கேற்று தங்களது அனுபவங்களை பகிறவுள்ளனர். மேலும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்று விழாவை சிறப்பிக்கவுள்ளனர்.
எனவே புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று பயனடையலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கவிதா ராமு, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.