இந்தியாவில் பதிவானது முதல் XE வகை கொரோனா வைரஸ்… மும்பையில் கண்டறியப்பட்டதாக தகவல்!!
இந்தியாவில் மும்பையில் முதல் XE வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. ஒமிக்ரான் வைரஸின் உருமாற்றமடைந்த XE கொரோனா வைரஸ் பரவுதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருந்தது. இந்த புதிய வகை வைரஸ் ஒமிக்ரானைவிட அதிகமாகப் பரவக்கூடியதாக இருக்கலாம் எனவும் எச்சரித்துள்ளது.
XE என்பது ஒமிக்ரானிலிருந்து உருமாறிய வைரஸ்களான BA.1 மற்றும் BA.2 ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளிடமிருந்து உருமாறியுள்ளது. புதிய XE வைரஸானது ஒமிக்ரானின் BA. 2 பிறழ்வைவிட 10 மடங்கு வேகமாகப் பரவக்கூடியது எனவும், BA.2 உடன் ஒப்பிடும்போது அதன் சமூகப் பரவல் 10% அதிகம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதுபற்றிய ஆய்வுகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த உருமாற்றம் அடைந்த XE கொரோனா வைரஸ் இந்தியாவில் கண்டறிப்பட்டுள்ளது. மும்பையை சேர்ந்த ஒருவருக்கு இந்த உருமாற்றம் அடைந்த XE கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 376 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டது. அதில் 230 மாதிரிகள் மும்பையை சேர்ந்தது. 230 மும்பை மாதிரிகளில், 228 பெருக்கு ஓமிக்ரான், ஒரு கப்பா வகை வைரஸ் மற்றும் ஒரு XE வகை கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.