காரைக்குடி அருகே விபத்து

2988

காரைக்குடி – புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் நின்ற லாரி மீது சுற்றுலா வேன் மோதி கோர விபத்து – பெண் இருவர் பலி – 4 குழந்தைகள் உள்பட 25 பேர் படுகாயம்

சிவகங்கை மாவட்டம் திருச்சி இராமேஸ்வரம் காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் தீயணைப்பு அலுவலகம் அருகே சாலை அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது சிவகங்கை மாவட்டம் இளையாங்குடி பகுதியை சேர்ந்தவர்கள் காரைக்குடியில் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு வரும் போது மினி சுற்றுலா வேன் லாரி மீது மோதல்..

இடது புறம் வேனின் பக்கவாட்டு பகுதி முழுவதும் சேதம் அடைந்தது ..இரண்டு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.. இரண்டு குழந்தைகள் உட்பட இருபத்தி ஐந்து பேர் படுகாயம் அடைந்தனர்.. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தலைமை மருத்துவமனையில் படுக்கை வசதி இல்லாமல் தரையில் படுக்க வைத்து சிகிச்சை வழங்கும் அவலம்.

திருச்சி இராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு..