பல்லவன் ரயிலுக்கு வரும் பேருந்து மீண்டும் இயக்கம் பயணிகள் மகிழ்ச்சி!

2700

பல்லவன் ரயிலுக்கு வரும் பேருந்து நிறுத்தப்பட்டுவிட்டதாக பயணிகள் சிலர் மாண்புமிகு பாராளுமன்ற உறுப்பினர் திரு. M. M. அப்துல்லா அவர்களிடம் குறைகளை தெரிவித்தனர். இதற்கு ஒரு வாரத்தில் தீர்வு காணப்படும் என்று நமது பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்திருந்தார். தற்போது இதற்கு தீர்வு காணப்பட்டுள்ளது. நேற்று முதல் போட்மெயில் & பல்லவன் ரயிலுக்கு வரும் பேருந்துகள் ரயில் நிலையத்திற்கு வந்துள்ளன. பயணிகளை குறைகளை கேட்டு உடனடி நடவடிக்கை எடுத்த மாண்புமிகு பாராளுமன்ற உறுப்பினர் திரு. M. M. அப்துல்லா அவர்களுக்கு புதுக்கோட்டை பொது மக்களின் சார்பாக நன்றிகள்!

ஐயா ஒரு வேண்டுகோள்:- தற்போது புதுக்கோட்டை ரயில் நிலையத்திற்கு இயக்கப்படும் பேருந்துகள் சிறப்பு பேருந்துகளாக இயக்கப்படுகின்றன. ஆதலால் இவைகள் நிரந்தரமாக தொடர்ந்து இயங்குவதில் சிக்கல் நீடிக்கிறது. புதுக்கோட்டை நகர பகுதிகளிலிருந்து புதுக்கோட்டை ரயில் நிலையத்திற்கு என்று தனி மினி பேருந்து அல்லது நகர பேருந்து ஒதுக்கீடு செய்து பேருந்து நிரந்தரமாக தொடர்ந்து இயங்க நடவடிக்கை வேண்டும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் இரவில் மதுரை, காரைக்குடி போன்ற பகுதிகளிலிருந்து பேருந்துகள் ரயில்நிலையம் ரௌண்டான வழியாக கடந்து செல்கின்றன. புதுக்கோட்டை ரயில் நிலையத்திலிருந்து நள்ளிரவு ராமேஸ்வரம் மார்க்கமாக செல்லும் ‘சேது ரயில்’-12:05(தினசரி), சென்னை மார்க்கமாக செல்லும் ‘சேது ரயில்’-12:10, ராமேஸ்வரம் மார்க்கமாக செல்லும் செல்லும் போட்மைல் ரயில்-03:45 மணிக்கு(தினசரி) ரயில்களுக்கு பொருந்தும் வகையில் ரயில் நிலைய ரௌண்டான-வில் நின்று செல்லவும் தாங்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும்படியும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

Credits : Pudukkottai Railuesr