ஏழு மாவட்டங்களின் முதன்மைக் கல்வி அலுவலர்களைப் பள்ளிக் கல்வித் துறை இடமாற்றம் செய்துள்ளது.
சிவகங்கை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு. எஸ்.மணிவண்ணன் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு.எஸ். சத்தியமூர்த்தி தஞ்சாவூர் மகாராஜா சரபோஜி சரசுவதி மகால் நூலகம் மற்றும் ஆய்வு மையம்,கல்வி அலுவலராக ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.
மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு.ஆர் சுவாமிநாதன் சிவகங்கை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.
நீலகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஏ.நசருதீன் திண்டுக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருமதி.ஆர்.திருவளர்ச்செல்வி, திருப்பூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை (நிர்வாகம்) தொடக்கக் கல்வி இயக்ககம் திருமதி வி.வெற்றிச்செல்வி துணை இயக்குநர் ,காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.
தொடக்கக் கல்வி இயக்ககத் துணை இயக்குநர் வெற்றிச்செல்வி காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.
நாமக்கல், உளுந்தூர்ப்பேட்டை, செங்கல்பட்டு மாவட்டக் கல்வி அலுவலர்கள் முறையே திருவள்ளூர், மதுரை, நீலகிரி மாவட்டங்களின் முதன்மைக் கல்வி அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.