அறந்தாங்கி சென்னை இடையே பேருந்து சேவை

933

அறந்தாங்கியிலிருந்து சென்னைக்கு இரு மார்க்கமும் புதிய படுக்கை வசதி கொண்ட விரைவு பேருந்து சேவை (SETC) இயக்க கோரிக்கை

அறந்தாங்கி சுற்றுவட்டார பகுதிமக்களின் முக்கிய தேவையான சென்னை பேருந்து சேவையை மறுபடியும் தொடங்க வேண்டி கோரிக்கை விடுத்துள்ளனர் தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழக மூலம் முன்னதாக இயங்கி வந்த அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்தை மறுபடியும் தொடர்ந்து இயக்க வேண்டி இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினரிடம் அறந்தாங்கி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.. இதையடுத்து இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனிMP

அறந்தாங்கியிலிருந்து புதுக்கோட்டை திருச்சி வழியாக சென்னைக்கு இரு மார்க்கமும் புதிய படுக்கை வசதி கொண்ட விரைவு பேருந்து சேவை (SETC) இயக்க வேண்டி போக்குவரத்து அமைச்சருக்கு நவாஸ் கனி MP கடிதம் எழுதியுள்ளார்.

அறந்தாங்கியிலிருந்து சென்னைக்கு இரு மார்க்கமும் புதிய படுக்கை வசதி கொண்ட விரைவு பேருந்து சேவை (SETC) இயக்க கோரிக்கை -தொடர்பாக..

இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட
புதுக்கோட்டை மாவட்டம். அறந்தாங்கி சுற்றுவட்டார பகுதி மக்கள் அறந்தாங்கியில் இருந்து சென்னை வரை இரு மார்க்கமும் படுக்கை வசதி கொண்ட விரைவு பேருந்து இயக்க வேண்டுமென தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.

எனவே அறந்தாங்கி சுற்றுவட்டார பகுதி மக்களின் கோரிக்கையை பரிசீலித்து, அறந்தாங்கியில் இருந்து சென்னை வரை இரு மார்க்கமும் படுக்கை வசதி கொண்ட விரைவு பேருந்து சேவை (SETC) இயக்க உரிய நடவடிக்கை எடுக்க உதவிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.