பொன்னமராவதி அருகே செம்பூதியில் காரில் சென்ற கணவன் மனைவி இருவரும் விபத்தில் சிக்கி உயிரிழப்பு. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.
புதுக்கோட்டை ராஜகோபாலபுரம் அருகே பூங்கா நகரில் வசித்து வரும் ராமநாதன் மகன் சிதம்பரம் வயது 65. இவரும் இவரது மனைவி அலமேலு வயது 60. இருவரும் பொன்னமராவதி அருகே உள்ள வேந்தன்பட்டியில் திருமண விழாவில் கலந்து கொண்டு சொந்த ஊரான புதுக்கோட்டைக்கு காரில் வந்து கொண்டிருந்தனர்.
அப்போது புதுக்கோட்டை செல்லும் சாலையில் பொன்னமராவதி ஒன்றியம் செம்பூதி அருகே சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென நிலை தடுமாறி சாலையோரம் புளிய மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
கணவன் மனைவி இருவரும் உயிரிழப்பு
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே சிதம்பரம் உயிரிழந்துள்ளார்.மேலும் காரில் இடது புறத்தில் அமர்ந்து இருந்த சிதம்பரம் அவர்களின் மனைவி அலமேலு இரண்டு கால்களும் விபத்தில் சிக்கி எலும்பு முறிந்து துண்டிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு தகவலறிந்து விரைந்து வந்த பொன்னமராவதி தீயணைப்பு தலைமையிலான தீயணைப்பு படை வீரர்கள் அவரை மீட்டு அக்கம் பக்கத்தினர் உதவியுடன், வலையப்பட்டி பாப்பாயி ஆச்சி நிலைய அலுவலர் சந்தானம் அரசு மருத்துவமனையில்
மேலும் சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அலமேலுவும் உயிரிழந்துள்ளார். திருமணத்தை முடித்து சொந்த ஊருக்கு செல்லும் போது ஏற்பட்ட இந்த கார் விபத்து சம்பவத்தினால் இருவர் உயிரிழப்பு. சம்பவத்தை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். பொன்னமராவதி போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
படங்கள் உதவி : இளையராஜா கீரவாணி