தென்னையை தாக்கும் சிவப்பு கூன் வண்டுகளை கட்டுப்படுத்தும் வழிமுறை

570

வேளாண் இணை இயக்குனர் ஆலோசனை

தென்னை மரங்களை தாக்கும் சிவப்பு கூண் வண்டுகளை கட்டுப்படுத்திட புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் இராம. சிவகுமார் ஆலோசனை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பு:
புதுக்கோட்டை மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள தென்னை மரங்களை சிவப்பு கூண்வண்டு தாக் குதலில் இருந்து ஒருங் கிணைந்த மேலாண்மை முறைகளை கடைப்பி டிப்பதன் மூலம் பாது காக்கலாம். பொதுவாக தென்னை மரங்களில் காயங்களோ அல்லது காண்டாமிருக வண்டின் தாக்குதலோ இருந்தால் தென்னை மரங்களை சிவப்பு கூண்வண்டுகள் எளிதாக தாக்கி சேதம் விளைவிக்கும்.

இதன் தாக்குதலால் மரத்தில் ஓட்டைகளும், ஓட்டைகள் வழியே திசுக்களைத் தின்ற பின் வெளியே தள்ளப்பட்ட மரநாறுகளும் காணப்ப டும். புழுக்கள் உட் சென்ற சிறிய துவாரத் தின் வழியே சிவப்பு நீர் வடிந்து காய்ந்த பிசின் போன்று காணப்படும். வெள்ளைப் புழுவா னது இளந்தண்டு பகுதி யைத் துளைத்து உள்ளே சென்று,இளந்தண்டின் சோற்றுப்பகுதியைத்தின்று சேதம் விளைவிக்கும்.

சேதம் அதிகமாகும் பொழுது மரத்தின் கொண்டைப் பகுதி எளிதாக முறிந்து விழும். மரத்தின் தண்டுப்பகுதி யில் கூர்ந்து கவனித்தால், புழுக்கள் இரைகின்ற ஓசை கேட்கும்.

பூச்சியை அடையாளம் காணுதல்:
சிவப்பு கூண் வண் டுகள் துளைக்கப்பட்ட துவாரங்கள், காயம் பட்ட மற்றும் தண்டின் தாக்கப்பட்ட இடுக் குகளில் முட்டைகளை இடுகின்றன. புழுவானது . இலேசான மஞ்சள் நிறத்துடன் காணப்ப டும். இப்புழுக்களுக்குக் கால்கள் கிடையாது. குட்டையான, சதைப் பற்றுடன், நடுவில் தடித் தும் ஓரங்களில் சற்று குறைந்ததாகவும் புழுக் கள் காணப்படும்.இப்பு ழுக்கள், தின்று கழித்த நார் மற்றும் சக்கைப்ப குதியை இணைத்து கூண்டுப்புழுக்களாக மாறுகின்றன. வளர்ந்த வண்டுகள், சிவப்பு கலந்த பழுப்பு நிறத்தில், முதுகுப் பகுதியில் 6 புள்ளி களுடன் காணப்படும். ஆண் வண்டுகள் நீண்ட துதிக்கை போன்ற மூக்குடனும் வாய்ப்பாகத்தில் அடர்ந்த உரோமங்களுட னும் காணப்படும்.

மேலாண்மை முறைகள்: முற்றிலும் பாதிப்படைந்த மரங்கள் அல்லது காய்ந்த மரங்களைத் தென்னந்தோப்பிலிருந்து அப்புறப்படுத்திட வேண் டும். எக்காரணத்தைக் கொண்டும் மரங்களின் மேல்; பாதிப்பையோ காயங்களையோ ஏற்படுத் தக் கூடாது.

ஏனெனில் இப்பகுதி கள் சிவப்புக் கூன்வண்டு முட்டையிட ஏதுவாகும். பச்சை ஓலைகளை வெட் டுவதைத் தவிர்க்க வேண் டும். தேவையெனில் மரத்தின் அடிமட்டையிலிருந்து 4 அடி விட்டு வெட்ட வேண்டும்.



மணலுடன் வேப்பங் கொட்டைப் பொடி 2:1 என்ற வீதத்தில் கலந்த கல வையை கலந்து மட்டை இடுக்குகளில் 3 மாதங் களுக்கு ஒருமுறை வைப்ப தால் காண்டாமிருகவண்டுத் தாக்குதலைத் தடுப்பதன் மூலம் சிவப் புக் கூன் வண்டு முட்டை இடுவதைத் தவிர்க்கலாம்.

கரும்புச்சாறு 2.5 கி.கி.ஈஸ்ட் மாத்திரை 5 கிராம்5 மி.லி. அசிடிக் அமிலம் நீளவாக்கில் வெட்டப்பட்ட ஓலை மட்டைத் துண்டுகள் போடப்பட்ட பானை களை ஏக்கருக்கு 30 வீதம் தென்னந்தோப்பில் வைத் துக் கூண்வண்டுகளைக் கவரச் செய்து அழிக்கலாம்.

5 ஏக்கருக்கு ஒரு இனக்கவர்ச்சிப் பொறி என்ற வீதத்தில் வைத்துக் கட்டுப்படுத்தலாம்.

அதிகப்படியாக சேத மான இடங்களில் மரம் முற்றிலும் பாதிப்படைந் தால் மட்டும் இதற்கு வேரின் மூலம் மருந்து செலுத்தி கட்டுப்படுத்தலாம். 7-செ.மீ-க்கு 10 செ.மீ. அளவுள்ள பாலித்தீன் பையில், 10.மி.லி. மோனோகு ரோட்டபாஸ் 36 றுளுஊ என்ற மருந்துடன் 10 மி.லி. நீரினை கலந்து சேர்த்த, இக்கலவையில் புதிய வேரினைத் தேர்வு செய்து சாய்வாகக் கூர் மையாக வெட்டி அவ் வேரில் படுமாறு இறுகக் கட்ட வேண்டும்.

வேர் மூலம் மருந்து கலாம். செலுத்திய தென்னை மரங்களில் 45 நாட் களுக்கு தேங்காய் மற்றும் இளநீர் அறுவடை செய்யக்கூடாது. மேலும் கூடுதல் விவரங்களுக்கு ள் தங்கள் அருகிலுள்ள வட் டார வேளாண்மை விரி வீதம் வாக்க மையங்களைத் வைத் தொடர்பு கொள்ளளக் கேட்டுக்கொள்ளப்ப டுகிறது. எனவே புதுக்கோட்டை மாவட்ட விவ சாயிகள் தென்னையில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளை கடைப்பிடித்து சிவப்பு கூண்வண்டு தாக்குதலை கட்டுப்படுத்திடுமாறு வேளாண்மை இணை இயக்குநர் ராம். சிவகு மார் ஆலோசனை தெரிவித்துள்ளார்.