தமிழ்நாடு அரசு
நிர்வாகத்தின் சார்பில்
இரண்டு (2) மாதத்தில் புதுக்கோட்டை
பழனியப்பா கார்னரில் உள்ள
அரசு டாஸ்மாக் கடை எண்:(6514)
மூடப்படும் என
எழுத்து பூர்வமாக அறிவிப்பு:
✍️ ✍️ ✍️
புதுக்கோட்டை நகராட்சியில்
அதிக முக்கியத்துவம் வாய்ந்த
பகுதியான அரசு ராணியார் மகப்பேறு
மருத்துவமனை அருகில்
அரசு விதிமுறைகளை மீறி நடத்தப்படும்,
டாஸ்மாக் கடையை
அப்புறப்படுத்த கோரி
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்),
புதுக்கோட்டை நகரக் குழு சார்பில்
பழனியப்பா பேருந்து நிறுத்தத்தில்
(30.6.2022) வியாழக்கிழமை இன்று
காலை 11 மணியளவில்
மாபெரும் சாலை மறியல் போராட்டம்,
கந்தர்வக்கோட்டை சட்ட மன்ற உறுப்பினர்
மாண்புமிகு மா.சின்னதுரை.MLA.,
CPI(M)-மாநில குழு உறுப்பினர்,அவர்களது
தலைமையில் போராட்டம் நடைபெற
இருந்த நிலையில்,
புதுக்கோட்டை வட்டாட்சியர்,
டாஸ்மாக் நிர்வாக அதிகாரிகளால்,
சமாதான கூட்டத்திற்கு
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்),
தோழர்கள், பொருப்பாளர்களுக்கு
அழைப்பு விடுக்கப்பட்டதை தொடர்ந்து,
நேற்று மாலை 5.30 PM மணி
முதல் 8.30 PM வரை
மூன்று மணி நேரமாக இந்த டாஸ்மாக்
கடையினால் ஏற்படுகிற குற்ற சம்பவங்கள்,
பிரச்சனைகள், மற்றும்
உண்மை கள நிலவரங்களான…
1)புதுக்கோட்டை நகராட்சிக்கு
சொந்தமான கடையில்
சட்ட விரோதமாக டாஸ்மாக் கடை
நடத்துவதை தடுத்து,
உரியவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும்,
டாஸ்மாக் கடைக்கு சீல் வைக்க வேண்டும்
என்று புதுக்கோட்டை வட்டாட்சியர்
அவர்களிடம் இந்திய கம்யூனிஸ்ட்
கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில்
புகார் மனு அளிக்கப்பட்டது.
2) அரசு ராணியார் மகப்பேறு
மருத்துவமனைக்கு வரும் கர்ப்பினிப்பெண்கள்
மற்றும் அவர்களின் உறவினர்கள்
பெண்கள் அனைவரும் இவ்டாஸ்மாக்
கடையினால் முகம் சுளிக்க வைக்கும்
நிலை உள்ளது.
3) அரசு விழாக்கள், பொது நிகழ்ச்சிகள்
என அடிக்கடி நடக்கும் இடமாகவும்,
அரசின் முக்கிய
அதிகாரிகள், பொதுமக்கள் என அனைவரும்
கூடும் இடமாகவுள்ள
நகர் மன்ற கட்டிடம் இங்குள்ளது.
4)அதுமட்டுமல்ல அரசு தொடக்க பள்ளியும்,
தனியார் பள்ளிகளும் மிக அருகில் இருக்கிறது.
5) இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த
இந்த இடத்தில் இரண்டு டாஸ்மாக்
கடையை வைத்து பொதுமக்களுக்கு
இடையூறு ஏற்படுத்தும் வகையில்
அதிக லாபம் ஈட்டுகிறது மாவட்ட நிர்வாகம்.
6) அரசு விதிமுறைகளை மீறி நடத்தப்படும்
இந்த டாஸ்மாக் கடையினால்,
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத
சாலையாகவும், இதனால்
பொது மக்கள் கடுமையாக
பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனை கருத்தில் கொண்டும்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
நகர குழு தோழர்கள், பொருப்பாளர்கள்,
சமாதான கூட்ட பேச்சுவார்த்தையில்,
கலந்து கொண்ட அரசு அதிகாரிகளான
புதுக்கோட்டை வட்டாட்சியர்,
உதவி மேலாளர் (டாஸ்மாக் நிர்வாகம்),
உதவி காவல் ஆய்வாளர் (நகர காவல் நிலையம்),
நகராட்சி வருவாய் ஆய்வாளர் (புதுக்கோட்டை),
மண்டல துணை வட்டாட்சியர் (புதுக்கோட்டை),
சரக வருவாய் ஆய்வாளர் (புதுக்கோட்டை),
ஆகிய அதிகாரிகளிடம் எடுத்து கூறப்பட்டது.
நீண்ட பேச்சுவார்த்தைக்கு பின்
புதுக்கோட்டை மாவட்ட
நிர்வாகத்தால் இரண்டு மாதத்தில்
இந்த டாஸ்மாக் கடை
மூடப்படும் என்று எழுத்து பூர்வமாக
அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் இன்று நடைபெற இருந்த
சாலை மறியல் போராட்டம் தற்காலிகமாக
நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது…