திருக்கோவிலூர் – திருவண்ணாமலை நான்கு வழி சாலை

389

நான்கு வழி சாலை ஆக மாற்றம்.

கடலூர் – சித்தூர் சாலையில், திருவண்ணாமலை மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டம் வழியாக செல்லும் பகுதிகள் நான்கு வழி சாலை ஆக மாற்றப்பட உள்ளன.

28 km தூரம் ரூபாய் 205 கோடி செலவில் நான்கு வழி சாலை ஆக மாற்றம் செய்யப்பட உள்ளது. திருவண்ணாமலை – திருக்கோவிலூர் இடையே உள்ள பாதை மாற்றப்படும் என்று தெரிகிறது.

நல்ல விஷயம். அதே போல இந்த உளுந்தூர்பேட்டை – திருக்கோவிலூர் சாலையை இது போல மேம்படுத்தி விட்டால் இன்னும் நன்றாக இருக்கும்.

அப்படி இல்லை என்றால் அறிவிக்கப்பட்ட திருவண்ணாமலை – திருச்சி
வழி: மணலுர்பேட்டை, தியாகதுர்கம்,அடரி வேப்பூர் இந்த சாலை நான்கு வழி சாலை ஆக மாற்றப்பட்டால் கூட அதுவும் நன்மையே.

விருத்தாச்சலம் பகுதியில் இருந்து கடலூர் – சின்னசேலம் வழியாகவோ அல்லது உளுந்தூர்பேட்டை பகுதியில் இருந்து உளுந்தூர்பேட்டை – சேலம் சாலை வழியாகவோ இந்த புதிய திருச்சி – திருவண்ணாமலை சாலையை பயன்படுத்தி கொள்ள முடியும்.