திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமானநிலையம்

1256

திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமானநிலையத்தில் பயணிகள் தங்களின் அனைத்துவிதமான புகார்கள் மற்றும் ஆலோசனைக்கு விமானநிலைய இயக்குனரை தொடர்பு கொள்ளவும். தொடர்பு மின்னஞ்சல் apdtrichy@aai.aero
இது தவிர air sewa என்ற மத்தியஅரசின் இணையதள புகார் மேலாண்மை முகவரியிலும் தங்கள் புகார்களை பதிவு செய்யலாம்.

வழக்கமாக புகார்களைப் பற்றி தங்களுக்குள்ளேயே பேசிவிட்டு முறையாக புகார் தராததால் விமானநிலைய இயக்குனரால் நடவடிக்கை எடுக்கவோ, நடவடிக்கைக்கு பரிந்துரை செய்யவோ இயலாத சூழல் உள்ளது.

வழக்கமாக எழும் புகார்களில் பெரும்பான்மையான புகார்கள் பயணிகள் மரியாதைக்குறைவாக நடத்தப்படுவதைப் பற்றியே. பயணிகள் தயக்கமின்றி தங்களின் எவ்வித உரிமைகள் பறிக்கப்பட்டாலும் முதலில் உடனடியாக புகார் தரவும்.

விமானநிலைய உள்நுழைவில் (Entry) கும்பல், நுழைவதற்கு தாமதம், குடியேற்றப்பிரிவ் தாமதம், வருகையில் குடியேற்றப்பிரில் (Immigration) தாமதம், பயணஉடைமை கோரலில் (Luggage collection) தாமதம், சுங்கத்துறை சார்ந்த சோதனையில் தாமதம் போன்ற எவ்வகை தாமதத்திற்கும் தயங்காமல் முதலில் புகார் தரவும்.

அதேபோல் பயணியின் பாஸ்போர்ட் ECR அல்லது ECNR என எந்த பாஸ்போர்ட்டாக இருந்தாலும் விசிட் விசாவில் வெளிநாடு செல்ல எவ்வித தடையும் இல்லை. பயணிகள் புரோபைலிங் என்று எவ்வித சட்டமும் இல்லை. பயணிகளை விசிட் விசாவில் குடியேற்ஸப்பிரிவு அதிகாரிகள் அனுமதிக்காத பட்சத்தில் அதிகாரிகளிடம் விளக்கம் கேளுங்கள். தாங்கள் வலுக்கட்டாயமாக விமானநிலையத்தைவிட்டு குடியேற்றப்பிரிவு அதிகாரிகளால் வெளியேற்றப்பட்டால், நீங்கள் அநியாயமாக வெளியேற்றப்பட்டீர்கள் என உணர்ந்தால் உடனே விமானநிலைய டெர்மினல் மேனஜரிடம் எழுத்து மூலம் புகார் தரவும். தயங்காமல் விமானநிலைய இயக்குனருக்கு மின்னஞ்சல் அனுப்பவும். மேலும் திருச்சிராப்பள்ளி விமானநிலைய பயணிகள் ஆலோசனைக்குழுத் தலைவர் என்ற அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.சு.திருநாவுக்கரசரிடமும் புகார் தரவும். MP அவர்கள் இம்மாதிரியான உரிமை பறிப்பு விசயங்களில் கூடுதல் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார். MP அவர்களின் மின்னஞ்சல் முகவரி: arasar13@gmail.com
ட்விட்டர் முகவரி:
@thiruarasarinc

எல்இடி, எல்சிடி, தொடுதிரை போன்ற டிவிக்கள் எடுத்து வரும்போது அவற்றை எடுத்துத்தர ஊழியர்கள் பணம் கேட்டால் தயங்காமல் புகார்தரவும்.

பயணிகளின் லக்கேஜே விமானநிறுவனம் கவனக்குறைவாக கையாண்டாலோ, பொருட்களுக்கு சேதம் ஏற்படுத்தினாலோ வழக்காமாக விமானநிறுவனத்திடம் புகார் தருவதோடு மட்டுமன்றி, விமானநிலைய இயக்குனருக்கும் புகார் அனுப்பவும்.

சுங்கத்துறை அதிகாரிகள் தங்களிடம் சோதனை என்ற பெயரில் அத்து மீறினாலோ, சுங்கத்துறை சோதனையில் தேவையற்ற நேரவிரயங்கள், பயணிகளை உள்நோக்கத்துடன் நிற்கவைத்தல், மதரீதியிலான பாகுபாடுகள் உள்ளிட்ட எவ்வித புகார்களுக்கும் தயக்கமின்றி புகார் தரவும்.

டிராலியை சேகரிக்க வரும் நபர்கள் பணம் கேட்டாலும் உடனே யோசிக்காமல் புகார் தரவும்.

பயணிகள் புகார் தராமல் சென்று விடுவதால் தவறு செய்யும் ஒருசில அதிகாரிகளுக்கு வாய்ப்பாக போய்விடுகிறது. தங்களின் தயக்கமே தவறிழைப்பவர்களின் வாய்ப்பு என்பதை நினைவிற்கொள்க.

மின்னஞ்சல்:
apdtrichy@aai.aero
ட்விட்டர்:
@aaitrzairport

பயணிகளின் பயணம் இனிதாகட்டும்!

Tiruchirappalli International Airport – AAI