ஒரே நாளில் வெளியாகும் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்..

489

பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் கவனத்திற்கு…*

*ஒரே நாளில் வெளியாகும் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள்..*

20ம் தேதி காலை 9.30 மணிக்கு பிளஸ் 2 முடிவுகளும் , பகல் 12 மணிக்கு 10ம் வகுப்பு முடிவுகளும் வெளியாகிறது…

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தேர்வு முடிவுகளை வெளியிடுகிறார்

மே-2022-ல் நடைபெற்ற 2021-2022-ஆம்

கல்வியாண்டிற்கான மேல்நிலை இரண்டாமாண்டு(+2) மற்றும் பத்தாம் வகுப்பு:S.S.LC பொதுத்தேர்வு முடிவுகள் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களால் 20.06.2022 (திங்கட்கிழமை) அன்று அண்ணா நூற்றாண்டு நூலகக் கூட்டரங்கில் வெளியிடப்படப்படவுள்ளது. தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் நேரம் மற்றும் மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை அறிந்துக்கொள்ளும் இணையதள முகவரி பின் வருமாறு தெரிவிக்கப்படுகிறது.

www.tnresults.nic.in  www.dge1.tn.nic.in  
www.dge2.tn.nic.in  

www.dge.tn.gov.in 

ஆகிய தலங்களில் முடிவுகளைப் பார்க்கலாம்..

தேர்வர்கள் மேற்கண்டுள்ள இணையதளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும் (National Informatics Centres) அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.