பெண்ணை ஏமாற்றிய வழக்கில் குடும்பத்துக்கே சிறை தண்டனை…

1094

பெண்ணை ஏமாற்றிய வழக்கில் குடும்பத்துக்கே சிறை தண்டனை…

முதல் திருமணத்தை மறைத்து பேஸ்புக் மூலம் பழகிய சிங்கப்பூர் பெண்ணை , பதிவுத் திருமணம் செய்து ரூபாய் 72.85 லட்சம் வரதட்சிணை பெற்று… மூன்றாவதாக வேறு பெண்ணை திருமணம் செய்ய முயன்ற புதுக்கோட்டையை சேர்ந்த சோலை கணேசனுக்கு 37 ஆண்டுகள் சிறை தண்டனை புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு…சோலை கணேசனின் தாய் தங்கை சகோதரி சகோதரர் சித்தப்பா ஆகியோருக்கும் சிறை தண்டனை விதிப்பு…

2-வது திருமணம் செய்து ₹72.85 லட்சம் மோசடி – இளைஞருக்கு 37 ஆண்டுகள் சிறை தண்டனை!!

முதல் திருமணத்தை மறைத்து ₹72.85 லட்சம் வரதட்சனையுடன் 2வது திருமணம் செய்த புதுக்கோட்டை இளைஞருக்கு 37 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை வசந்தம் நகர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சோலை . இவரது மகன் சக்தி கணேசன். இவரை சோலை கணேசன் என்று அழைக்கும் நிலையில் இவருக்கும் சென்னையை சேர்ந்த சீதாலட்சுமி என்ற பெண்ணுக்கும் கடந்த 2010ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர். இந்த சூழலில் சோலை கணேசனுக்கு சிங்கப்பூரில் வேலை கிடைத்ததை தொடர்ந்து அவர் சிங்கப்பூருக்கு சென்று உள்ளார் . சிங்கப்பூரில் வசித்து வரும் சென்னை பெரம்பூர் ரமணா நகரை சேர்ந்த சங்கீதாவுடன் சோலை கணேசனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து 2 பேரும் கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். சோலை கணேசன் சங்கீதாவிடம் இருந்து வீடு, நிலம் வாங்க வேண்டும் என்று கூறி ரூபாய் 72 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் வரை பணம் வாங்கியுள்ளார். பின்னர் சங்கீதாவிடம் சொந்த ஊருக்கு சென்று விட்டு வருவதாக கூறிவிட்டு புதுக்கோட்டைக்கு வந்துள்ளார். சொந்த ஊருக்கு சென்ற கணவன் திரும்பி வராததால் சந்தேகமடைந்த சங்கீதா புதுக்கோட்டைக்கு வந்துள்ளார். அப்போது சோலை கணேசனுக்கு முன்பே திருமணம் ஆகிவிட்டது அவருக்கு தெரியவந்துள்ளது .

முதல் திருமணத்தை மறைத்து தன்னை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார் என்று சோலை கணேசன் மீது புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அத்துடன் தன்னிடம் இருந்து 72 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் பெற்று மோசடி செய்ததாகவும் , அத்துடன் மூன்றாவதாக திருமணம் செய்ய முயன்றதாகவும் புகார் கொடுத்துள்ளார். புகாரின்பேரில் சோலை கணேசன், அவரது தாயார் ராஜம்மாள் ,சகோதரி கமலஜோதி, சகோதரர் முருகேசன் மற்றும் உறவினர் நாராயணசாமி ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர் . இந்த வழக்கின் விசாரணை புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் திருமணம் ஆனதை மறைத்து பேஸ்புக் மூலம் பழகிய சிங்கப்பூரை சேர்ந்த பெண்ணை, பதிவுத்திருமணம் செய்து ₹72.85 லட்சம் வரதட்சணையாக பெற்று, 3வது திருமணம் செய்ய முயன்ற புதுக்கோட்டையை சேர்ந்த சோலை கணேசனுக்கு 37 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.