சுகாதாரத்துறை செயலாளர் உட்பட பல ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்… தமிழக அரசு அதிரடி!

451

சென்னை: தமிழகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பலரும் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். தமிழக சுகாதாரத்துறை செயலாளரான ஜெ.ராதாகிருஷ்ணன் அப்பதவியில் இருந்து இடம் மாற்றம் செய்யப்பட்டு கூட்டுறவுத் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மருத்துவத்துறை மற்றும் குடும்ப நலத்துறை முதன்மை செயலாளராக பி.செந்தில்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மை செயலாளராக பிரதீப் யாதவ் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆணையராக ஜெசிகா ; போக்குவரத்து துறை ஆணையராக நிர்மல் குமார்; ஊரக வளர்ச்சித் துறை இயக்குநராக தாரேஷ் அகமது உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் தென்காசி, திருச்சி, ராமநாதபுரம், தருமபு ஆட்சியர்களும் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


தமிழக அரசு புதிய சுகாதார செயலாளராக செந்தில் குமார் நியமனம்!

கூட்டுறவுத் துறை செயலாளராக இருந்த நசிமுதீன், தொழிலாளர் நலத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார். நெடுஞ்சாலைத்துறை செயலரான தீரஜ்குமார், வணிகவரித்துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

திருச்சி மாவட்ட ஆட்சியராக பிரதீப்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். தருமபுரி ஆட்சியாக சாந்தி ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டிருக்கிறார். தருமபுரி ஆட்சியரான திவ்யதர்ஷிணி, மகளிர் மேம்பாட்டு நல ஆணையராக இடம் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். மதுவிலக்கு ஆயத்தீர்வு ஆணையராக மதிவாணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

உள்துறை செயலாளராக பணீந்தர ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார். திருச்சி ஆட்சியராக இருந்த சிவராசு, வணிக வரித்துறை கோவை இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். தென்காசி மாவட்ட ஆட்சியராக ஆகாஷ் நியமிக்கப்பட்டிருக்கிறார். ராமநாதபுரம் மாவட்ட புதிய ஆட்சியராக ஜானி டாம் வர்கீஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

முதல்வரின் முகவரி சிறப்பு அதிகாரி ஷில்பா பிரபாகர் சதீஷூக்கு தேசிய சுகாதார திட்ட இயக்குநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

வருவாய் நிர்வாக ஆணையராக எஸ்.கே.பிரபாகரன்; வரலாற்று ஆய்வுத் துறை ஆணையராக ஜி.பிரகாஷ் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வணிக வரித்துறை இணை ஆணையராக சங்கீதா; தமிழக பாடநூல் மேலாண் இயக்குநராக கஜலட்சுமி ஆகியோர் நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.

சிப்காட் மேலாண் இயக்குநராக சுந்தரவல்லியை தமிழக அரசு நியமினம செய்துள்ளார். சிட்கோ மேலாண் இயக்குநராக ஆனந்த் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.

தாட்கோ- நிறுவன மேலாண் இயக்குநராக ஜெயஶ்ரீ முரளிதரன் நியமிக்கப்பட்டுள்ளார். மின் ஆளுமை துறை இயக்குநராக பிரவீன் நாயர், பள்ளிக் கல்வித்துறை இணை செயலராக மணிகண்டன் நியமிக்கப்பட்டுள்ளனர். தொழில்துறை கூடுதல் செயலராக மரியம் பல்லவி பல்தேவ், போக்குவரத்து சிறப்பு செயலராக டி.என்.வெங்கடேஷ் நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு மாற்றப்பட்ட நிலையில் புதிய ஆட்சியராக பிரதீப் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை மாநகராட்சி இணை ஆணையராக சங்கர் லால், குடிமை பொருள் வழங்கல் நிறுவன இணை மேலாண் இயக்குநராக கற்பகம் நியமிக்கப்பட்டிருக்கின்றனர்