புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

512

இன்றைய புதுக்கோட்டை மாவட்ட செய்திகள் தேதி : 05.05.22

ஆய்வு : புதுக்கோட்டை மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் இன்று (05.05.2022) முதல் துவங்கியதை தொடர்ந்து, ஸ்ரீ பிரகதாம்பாள் மேல்நிலைப்பள்ளியில் பொதுத் தேர்வுகள் நடைபெறுவதை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கவிதா ராமு, இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை அறந்தாங்கி இலுப்பூர் உள்ளிட்ட 3 கல்வி மாவட்டங்களில் 93 தேர்வு மையங்களில் 19332 மாணவர்கள் பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வை எழுதி வருகிறார்.

புதிய சுற்றுலா தளம் : முத்துக்குடா கடற்கரை பகுதியில் நீர் விளையாட்டுகள்,படகு சவாரி, நடைபாதை, கடற்கரை விளையாட்டுகள் மற்றும் அடிப்படை வசதிகள் கொண்ட சுற்றுலா தலமாக மேம்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிப்பு

சிக்கன் பிரியாணி : புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள செந்தமில் நகரில் சித்திரவேல் என்பவரின் வீடு காங்கிரட் வேலை நடைபெற்று வருகிறது அங்கு வேலை பார்த்த கொத்தனார் மற்றும் சித்தாள் ஆகிய நபர்களுக்கு அறந்தாங்கியில் உள்ள *A1 பிரியாணி *
ஹோட்டலில் 40 சிக்கன் பிரியாணி ஆர்டர் செய்து வாங்கியுள்ளனர் சாப்பிட்ட நபர்கள் ஒருவர் ஒருவராக வாந்தி மயக்கம் போன்ற வைகள் வந்துள்ளது தற்பொழுது 9 நபர்கள் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அனுமதிக்க சேர்த்துள்ளனர் தொடர்ந்து சாப்பிட்டு நபர்கள் வந்த வண்ணம் உள்ளனர் இதில் சிறு வயது குழந்தை முதல் வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் பெரும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது

தற்பொழுது அறந்தாங்கி காவல் ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்….

புதுக்கோட்டை மாவட்டம் அண்டக்குளம் அருகே தொடர்ந்து பழுதாகும் மின்மாற்றியால் மின்தடை ஏற்பட்டு பயிர்கள் நீரின்றி கருகுவதாகவும் ஐந்து முறை செலவு செய்து மின்மாற்றி பழுது நீக்கியும் பலனில்லை எனக் கூறி கருகிய பயிர்களுடன் விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.

புதுக்கோட்டை திருவப்பூர் ரயில்வேகேட் அருகே நேற்று இரவு கார், லாரி, மினி சரக்கு வாகனம் உள்ளிட்ட 3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்த நிலையில் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கோயில் திருவிழாவில் கலை நிகழ்ச்சி பார்ப்பதில் ஏற்பட்ட மோதலில் இரு தரப்பைச் சேர்ந்த நபர்கள் ஒருவரை ஒருவர் இரும்பு கம்பியால் தாக்கி கொண்டதில் 3 பேர் காயம், மருத்துவமனையில் அனுமதி.

நம் ஊரின் பெருமை இவர்
இவரின் பெருமையை உலகுக்கு எடுத்துக் கொண்டு செல்ல வேண்டும் …

நண்பர்கள் மற்றும் வார்டு மக்களின் ஆதரவோடு மிக சிறப்பாக நடந்து முடிந்த அய்யா PU.சின்னப்பா அவர்களின் பிறந்த நாள் விழா !
அதோடு நகர்மன்ற தலைவர் அவர்களை சந்தித்து புதுக்குளம் பூங்கா என்ற பெயரை சின்னப்பா பூங்கா என்று மாற்றிட கோரியும்,அய்யா அவர்களுக்கு திருவுருவ சிலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்க மனு கொடுத்தோம்.40 வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் சுப.செந்தில் குமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்