கந்தர்வகோட்டை நகரத்தில் பெருகி வரும் போலி பத்திரப்பதிவுகள்….

489

கந்தர்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் பயன்பாட்டில் இருந்த விளையாட்டு மைதான இடத்தை போலியான ஆவணங்கள் மூலம் பத்திர பதிவு செய்திருந்தனர்….

இதுகுறித்து பள்ளி நிர்வாகம் புகார் அளித்திருந்தும் இதுநாள் வரை சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் கைது செய்யப்படாமல் உள்ளனர்….

நில அபகரிப்பு பிரிவு வசம் இந்த புகார் சென்றிருப்பதாகவும் தெரிகிறது, எனினும் இது சார்ந்து எவ்வித நடவடிக்கைகளும் குற்றவாளிகளுக்கு எதிராக எடுக்கப்படவில்லை என்பது கந்தர்வகோட்டை பகுதி மக்களுக்கு வேதனை அளிப்பதாக உள்ளது…

கந்தர்வகோட்டை அரசு பள்ளி மைதானத்தை போலியாக பத்திரம் பதிவு செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி கந்தர்வகோட்டை ஒன்றியக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது….

இவ்விஷயத்தில் அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து, பள்ளிக்கான இடத்தினை மோசடி செய்ய முயன்ற நபர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே முதன்மையான கோரிக்கையாக உள்ளது.

கந்தர்வகோட்டை அரசு பள்ளி மைதானத்தை போலியாக பத்திரம் பதிவு செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி கந்தர்வகோட்டை ஒன்றியக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது….

கந்தர்வகோட்டை மக்கள் இதனை உற்று நோக்கி வருகின்றனர்.
நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையில் பொறுமையுடன் காத்திருக்கின்றனர்.