திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா மகன் சூர்யா சிவா பாஜகவில் இணைந்தார்

759

சென்னையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார் சூர்யா சிவா

திருச்சி சிவா மகன் சூர்யா பாஜகவில் இணைய உள்ளதாக வெளியான தகவலே அது. திமுகவின் முன்னணி தலைவர்களில் கொள்கை ரீதியாக களமாடுபவர்களில் முக்கியமானவர் திருச்சி சிவா

திமுகவின் கொள்கைப் பரப்பு செயலாளராக உள்ள திருச்சி சிவா திமுகவின் மாநிலங்களவை எம்.பி.யாக உள்ளார். திருச்சி சிவா மத்திய மண்டலத்தில் திமுகவின் முக்கிய தலைவராக உள்ளார்.

திருச்சி சிவாவின் மகன் சூர்யா. இவர் தனது தந்தை பாரம்பரியமாக திமுகவில் இருந்தும், தந்தைக்கும் தனக்கும் உரிய அங்கீகாரம் கொடுக்கப்படவில்லை என்ற அதிருப்தியில் பாஜகவில் சேர சூர்யா முடிவு செய்துள்ளதாக பேச்சு எழுந்துள்ளது.

திருச்சி சிவாவின் மகன் சூர்யா, கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்து, நேர்காணலில் பங்கேற்றார். ஆனால், சூர்யாவுக்கு, திமுக தலைமை சீட் கொடுக்கவில்லை. இதனால், சூர்யா அதிருப்தியில் இருந்தார்.

அது மட்டுமல்ல, திருச்சியில் ஏற்கெனவே, கே.என். நேரு, அன்பில் மகேஷ் இருவரும் செல்வாக்கு செலுத்தி வருகின்றனர். அது மட்டுமல்ல கே.என். நேருவைத் தொடர்ந்து அவருடைய மகன் அருண் நேருவும் அரசியலுக்குள் வரத் தொடங்கியுள்ளார். ஆனால், திருச்சி சிவாவின் மகனுக்கு கட்சியில் இன்னும் ஒரு நல்ல இடம் கிடைக்கவில்லை. இதனால், சூர்யா அதிருப்தியில் இருந்து வந்ததாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அவரது மகனையே தங்கள் கட்சிக்கு கொண்டு வந்தால் பல விஷயங்களில் திமுகவுக்கு தண்ணி காட்டலாம் என அண்ணாமலை திட்டமிட்டிருக்கிறார். திமுக தலைமை தன்னை அங்கீகரிக்காததால் தான் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.