பொங்கல் பானைகள் மீது நடந்து சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்த அய்யனார்….

685

புதுக்கோட்டை அருகே பொங்கல் திருவிழாவை முன்னிட்டு பொங்கல் பானைகள் மீது நடந்து சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்த அய்யனார்….

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே உள்ள உப்புபட்டியில் அய்யனார் கோயில் உள்ளது. கடியாபட்டி, குளத்துப்பட்டி,
கொட்டியகாரன்பட்டி, தச்சன் வயல், சூலபட்டி, கைக்குறிச்சி உள்ளிட்ட 7 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் அய்யனார் கோயில் வைகாசி திருவிழாவை வருடம்தோறும் கொண்டாடி வந்தனர். இந்த நிலையில், உள்ளூர் பிரச்சனை மற்றும் கொரோனா தொற்று காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக அய்யனார் கோவில் திருவிழா நடைபெறாமல் இருந்தது.

செய்தி மற்றும் படங்கள்: இளையராஜா அழகு

இதையடுத்து இந்த ஆண்டிற்கான வைகாசி கோவில் திருவிழா இன்று விமர்சையாக தொடங்கியது. 2 நாட்கள் மட்டுமே நடைபெறும் இந்த கோவில் திருவிழாவில் முதல் நாளான இன்று பொங்கல் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

செய்தி மற்றும் படங்கள்:  இளையராஜா அழகு

ஏழு கிராமத்தின் சார்பாக தலா இரண்டு பொங்கல் பானை என மொத்தம் 14 பொங்கல் பானைகள் அய்யனார் கோயில் முன்பு வரிசையாக வைத்து பொங்கல் வைக்கப்பட்டது. முதலில் பொங்கல் பானையில் அரிசியின் கழனி தண்ணீர் ஊற்றி பூஜையுடன் தீ மூட்டப்பட்டது. இதையடுத்து கிராமத்தினர் முண்டியடித்துக்கொண்டு தங்கள் பொங்கல் பானைகளுக்கு போட்டிபோட்டு தீ மூட்டினார்.

செய்தி மற்றும் படங்கள்:  இளையராஜா அழகு

இதில் ஒவ்வொரு பொங்கல் பானையும் பொங்கி வழியும்போது பெண்கள் குலவையிட்டு ம், அதனை தொட்டும் வணங்கினர். இவ்வாறு 14 பொங்கல் பானைகளும் பொங்கி வழிய குலவைச் சத்தம் விண்ணை பிளந்தது.

இதனைத் தொடர்ந்து அய்யனாரின் அருள்பெற்ற ஒருவர் தெற்கு திசையில் இருந்து தகதகவென ஆவி பறந்து கொண்டிருக்கும் பொங்கல் பானைகளின் மீது மூன்று முறை நடந்துசென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் பொங்கல் பானை களுக்கு எந்த சேதமும் இல்லாமல் சுவாமி நடந்துசென்று அருள்பாலித்த நிகழ்வு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இந்த அரிய நிகழ்வை காண சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் திரண்டு கண்டுகளித்து, அருள் பெற்றனர். இதனைத் தொடர்ந்து பொங்கி வழிந்த பானைகளில் கிராமத்தினர் அரிசியை போட்டு பொங்கல் வைத்து அய்யனார் சுவாசாமிக்கு படைத்து வழிபட்டு சென்றனர்…

செய்தி மற்றும் படங்கள்: இளையராஜா அழகு