திமிறிய காளைகள் திணறிய வீரர்கள்

831

புதுக்கோட்டை தடி கொண்ட அய்யனார் கோவில் திருவிழாவை முன்னிட்டு கோயில் திடலில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது

புதுக்கோட்டை நகரத்தில் புகழ் பெற்ற அய்யனார் கோவில் பல வருடங்களாக நடைபெற்ற வந்த ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். நகரின் மத்திய பகுதியில் நடைபெறும் ஒரே ஜல்லிக்கட்டு வருடம் வருடம் வெகுவிமர்சையாக சிறப்பாக நடைபெறும்

இதேபோல் இந்த வருடம் இந்த ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது இந்த போட்டியில் 850 காளைகள் 300 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர்

புதுக்கோட்டை தஞ்சாவூர் திருச்சி சிவகங்கை காரைக்குடி தேனி திண்டுக்கல் ராமநாதபுரம் திருவாரூர் நாகப்பட்டினம் உள்ளிட்ட பகுதியில் இருந்து காளைகள் கொண்டு வரப்பட்டன முன்னதாக மருத்துவ குழுவினர் காளைகளை சோதனை செய்தனர்

போட்டியை வருவாய் கோட்டாட்சியர் அபிநயா மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. கவிச்சுடர் கவிதை பித்தன் ExMlaதொடங்கி வைத்தார்.

வாடிவாசலில் இருந்து சீறி வரும் காளைகளை
காளையர்கள் அடக்கினர்.

அதிக காளைகள் காளைகளின் பிடியில் சிக்கியது
பல காளைகள் வீரர்களுக்கு போக்குக் காட்டிச் சென்றது

இப்போட்டியில் வெற்றி பெற்ற காளைகளுக்கும் மாடுபிடி வீரர்களுக்கும் சைக்கிள் ரொக்கபணம் என பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.