காரைக்கால் மற்றும் தூத்துக்குடி துறைமுகம்

582

தமிழகத்தில் சென்னை, தூத்துக்குடி துறைமுகங்களுக்கு அடுத்தப்படியான பெரிய துறைமுகமாக உருவெடுத்துவருகிறது காரைக்கால் மாவட்டம், வாஞ்சூர் பகுதியில் உள்ள காரைக்கால் துறைமுகம். கடந்த 2009-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த துறைமுகத்தில் நிலக்கரிதான் பிரதான இறக்குமதிப் பொருளாக இருந்துவருகிறது. படிப்படியாக சர்க்கரை, கோதுமை, சிமென்ட், உரம், தேக்கு மரங்கள் போன்றவை இறக்குமதி செய்யப்பட்டாலும், இவற்றின் இறக்குமதியில் போதிய முன்னேற்றமின்மையால், நிலக்கரி இறக்குமதியில் முக்கிய பங்கை வகிக்கிறது.
 இந்த துறைமுகம் 5 கப்பல்கள் நிற்கும் (பெர்த்) வசதி உள்ளது. 13.5 மீட்டர் அகலம், 200 மீட்டர் நீளமுள்ள பெரிய கப்பல்கள் வந்து சரக்குகளை ஏற்றி, இறக்கும் வகையிலான வசதியில் துறைமுகம் அமைந்துள்ளன. இங்கு இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி ரயில் மற்றும் லாரிகளில் வெளியிடங்களுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன. அப்போது, நிலக்கரி துகள்களால் சுற்றுச்சூழல் வெகுவாக மாசுபடுகிறது என பல்வேறு தரப்பிலிருந்து வந்த புகாரைத் தொடர்ந்து, துறைமுக நிர்வாகம் ரூ. 600 கோடி மதிப்பில் துறைமுகத்தை இயந்திரமயமாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுவருகிறது.

இதில் என்ன என்று கேட்டால் இந்த இரண்டு துறைமுகம் மூலம் இனி நம் பகுதிக்கு சாலை கட்டமைப்பு மேம்பட பிரகாசமான வாய்ப்பு உருவாகி உள்ளது.

1. தூத்துக்குடி துறைமுகம் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.

2. காரைக்கால் துறைமுகம் ஆனது அதானி குழுமம் இடம் செல்ல உள்ளது.

இனி ஒவ்வொன்றாக பார்போம்.

முதலில் நம் காரைக்கால் துறைமுகம் பற்றி பார்ப்போம்.

இந்த துறைமுகம் இனி அதானி குழுமம் ( அரசியல் கருத்துகள் யாரும் உடனே பதிவிட வேண்டாம்) கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும். முதல் வேலையாக துறைமுகம் கட்டமைப்பு மற்றும் அதன் சாலை போக்குவரத்து கட்டமைப்பு சீரமைக்கப்படும் என்றே தோன்றுகிறது.

அப்படி நடக்கும் பட்சத்தில் கும்பகோணம் – காரைக்கால் சாலை தேசிய நெடுஞ்சாலை ஆக தரம் உயர வாய்ப்பு உள்ளது.

இதற்கு நம் பகுதி மக்கள் பிரதிநிதிகளும் முயற்சி எடுக்க வேண்டும். காரைக்கால் பகுதியில் இருந்து கும்பகோணம் வழியாக செல்லும் கனரக வாகனம் எண்ணிக்கை மற்றும் இதன் முக்கியத்துவம் இது குறித்து எடுத்து சொன்னாலே போதும் இந்த சாலை மேம்பட வாய்ப்பு உள்ளது.

இதுக்கு முன்னாடி இல்லாமல் இப்போது எப்படி மாறும் என்று கேட்டால், முன்பு இருந்த நிறுவனம் கடன் பிரச்சனையில் சிக்கி இருந்தது. தனியார் துறைமுகம் பொறுத்த வரை லாப நோக்கில் தான் இயங்கும் என்பதால் அவர்களுக்கு தேவையான கட்டமைப்பு மேம்படுத்த முதலில் அழுத்தம் தருவார்கள்.

காரைக்கால் துறைமுகத்தில் இருந்து அரியலூர் பகுதிக்கு சரக்கு வாகனம் அதிகம் சென்று வருகிறது. அதனால் நம் பல நாள் கோரிக்கை நிறைவேற அதிகம் வாய்ப்பு உள்ளது.

மேலும் நாள்தோறும் சரக்கு போக்குவரத்தில் காரைக்கால் துறைமுகம் மத்திய மாவட்டங்களில் முக்கியத்துவம் வகிக்கிறது. இதன் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை தொடர்ந்து இனி விரிவாக்கம் செய்யப்பட அதிக வாய்ப்பு உள்ளது. அப்படி ஆகும் பட்சத்தில் அதன் அருகில் உள்ள கும்பகோணம் மாநகராட்சி உடன் சாலை கட்டமைப்பு மேம்படும்.

மேலும் திருச்சி – காரைக்கால் இணைப்பு இதன் மூலம் மேம்படும்.

சென்னை ஈசிஆர் முதல் தூத்துக்குடி இசிஆர் சாலை நான்கு வழிச்சாலையாக தரம் மேம்படும்.. இதன் பயனாக மணமேல்குடி மீமிசல் சாலை நான்கு வழிச்சாலையாக தரம் மேம்படும்அடுத்து தூத்துக்குடி துறைமுகம்.

இந்த துறைமுகம் விரிவாக்கம் செய்யபட்டு பல கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட உள்ளன.

மேலும் சில சாலைகளை துறைமுகம் சார்பில் விரிவாக்கம் செய்ய சொல்லி கோரிக்கை வைத்துள்ளனர். அதன் படி நெல்லை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை மற்றும் திருச்சி – தூத்துக்குடி சாலைகளை 6 வழி சாலை ஆக மாற்றம் செய்ய சொல்லி கோரிக்கை வைத்துள்ளனர்.

தற்போது நடந்த சட்டமன்றத் கூட்டத்தொடரில் புதிய அறிவிப்பாக தமிழ்நாடு அரசு அறிவித்த செங்கல்பட்டு -திருச்சி – புதுக்கோட்டை – தூத்துக்குடி நான்கு வழிச்சாலை திட்டம் அறிவித்துள்ளது..

மேலும் அறிவிக்கப்பட்டு அதன் பிறகு என்ன நிலையில் இருக்கிறது என்று தெரியாமல் உள்ள பிள்ளையார்பட்டி – தூத்துக்குடி பசுமை வழி சாலை இதன் மூலம் மீண்டும் வர வாய்ப்பு உள்ளது. தற்போது விக்கிரவாண்டி – தஞ்சாவூர் – புதுக்கோட்டை -மானாமதுரை வரை செல்லும் NH 36 தூத்துக்குடி வரை நீட்டிக்கப்படலாம்.

அப்படி வரும் பட்சத்தில் தற்போது மானாமதுரை வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலை எண் 36 தூத்துக்குடி வரை நீட்டிப்பு ஆகும். நம் விக்கிரவாண்டி – கும்பகோணம் – தஞ்சாவூர் – புதுக்கோட்டை- மானாமதுரை சாலையும் பெரிய அளவில் முக்கியத்துவம் அடையும்.

புதிய தொழிற்சாலைகள் இச்சாலையில் வரவிருக்கும் இதன் மூலம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்

அனைத்தும் நல்ல விதமாக நடக்கும் என்று நம்புவோம்.

கட்டுரை : தீபக்