மாவட்ட விளையாட்டு அரங்கில் உயர் கோபுரம் அமைப்பு

2483

புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு திடலில் ரூபாய் 7.50 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட உயர் கோபுர மின் விளக்கினை அமைச்சர் மெய்யநாதன் இன்று தொடங்கி வைத்தார்

விழாவிற்கு கலெக்டர் கவிதாராமு தலைமை வகித்தார் மாவட்ட திமுக பொறுப்பாளர் செல்லபாண்டியன் நகராட்சி சேர்மன் திலகவதி செந்தில் நகரச் செயலாளர் நைனா முகமது மாவட்ட நெசவாளர் அணி பொறுப்பாளர் எம் எம் பாலு உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசியதாவது புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு அரங்கில் விரைவில் செயற்கை ரப்பர் ஓடுதளம் அமைக்க நடவடிக்கை எடுக்கபடுகிறது..

செயற்கை ரப்பர் ஓடுதளம் என்பது பன்னாட்டுத் தரத்தில் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கான தகுதி பெறும். இதில், மழைக்காலங்களில் கூட தடையின்றி போட்டிகள் நடத்தவும், விளையாட்டு வீரர்களைப் போட்டிகளின்போது காயமின்றி பாதுகாக்கவும், இப்பகுதியைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களும், மாணவர்களும் திறம்பட பயிற்சிகளை மேற்கொள்ளவும், பன்னாட்டு அளவில் தடகள வீரர்களை உருவாக்கவும் இப்புதிய செயற்கை ரப்பர் ஓடுதளம் உதவியாக அமையும் என்று அவர் தெரிவித்துள்ளார்.