பொன்னமராவதி அருகே மேலமேலநிலை ஊராட்சி தேரடிமலம்பட்டி குமார கண்மாயில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியம் மேலமேலநிலை ஊராட்சி தேரடி மலம்பட்டியில் உள்ள வாஸ்து கோவிலான பூமிநாதர் கோவில் அருகே உள்ள குமார கண்மாயில் மீன் பிடித்து விழா நடைபெற்றது.
இதில் ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் ரேவதி ஜெயராமன் தலைமையில் கோவில் கண்மாய் கரையில் தேங்காயை உடைத்து பூஜை செய்து வெள்ளை வீசிய பின்பு ஏராளமான சுற்று வட்டார பகுதியை சேர்ந்த மூலங்குடி, மேலமேலநிலை, மலம்பட்டி, செவலூர், பூலாங்குறிச்சி, கொப்பனாபட்டி, கொன்னைப்பட்டி, செம்பூதி, மதியணி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு கண்மாயில் இறங்கி ஊத்தா, தூரி கச்சா, வலை இவைகளை பயன்படுத்தி மீன் பிடித்தனர். இதில் ஜிலேபி, கெண்டை, கெளுத்தி, கட்லா உள்ளிட்ட பலவகை மீன்கள் பொதுமக்கள் பிடித்தனர்.
Source : Ilayaraja Keeravani