உலகமே வியக்கும் இலங்கையின் செயல்

455

இலங்கையில் கொழும்பு காலிமுகத்திடல் கடற்கரைக்கு நேற்றிரவு பல்லாயிரக்கணக்கான மக்கள் நாடு முழுவதிலுமிருந்து வந்து கலந்து கொண்டார்கள்.

காலையில் அந்தத் திடலில் சிறியதொரு குப்பை கூட இல்லை. அவர்களே கூட்டிப் பெருக்கி, அள்ளிப் போகத் தயாராக கட்டி வைத்திருக்கிறார்கள். பிளாஸ்டிக் போத்தல்களையும் போராட்டத்தின் ஒரு வடிவமாக, ஊழலுக்கு சவால்விடும் விதமாக வடிவமைத்திருக்கிறார்கள்.

உலகப் புகழ்பெற்ற Arab News ஊடகம் இந்த வாரத்தின் சிறந்த புகைப்படமாக இலங்கையின் மக்கள் எழுச்சி போராட்டக் களத்தை, உலகம் முழுதும் கொண்டு சேர்த்திருக்கிறது. இன்று Gotagogama கிராமத்துக்கு டயலோக் 4G இணைய வசதியும் வழங்கப்பட்டிருக்கிறது.