புதுக்கோட்டையில் ரூ 2.25 கோடி மதிப்பீட்டில் கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குனர் அலுவலகம் கட்ட பூமி பூஜை
புதுக்கோட்டை அரசு மாவட்ட கால்நடை பண்ணை வளாகத்தில் ரூபாய் 2.25 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் அலுவலகத்திற்கான பூமி பூஜை விழா இன்று எம்எல்ஏ முத்து ராஜா தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கே.கே செல்லபாண்டியன் மாவட்ட திமுக பொருளாளர் ஆ.செந்தில் நகர்மன்றத் துணைத் தலைவர் லியாகத்அலி கட்டுனர் சங்க முன்னாள் மாநில தலைவர் முத்துக்குமார் கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் சம்பத் உதவி இயக்குனர் பழனி பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் பாஸ்கர் அரசு ஒப்பந்தகாரர் ரமேஷ் குமார் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்