நார்த்தாமலையில் சாலை மறியல்

491

சுகாதார சீர்கேட்டை உண்டாக்கும் எம்எம் கல் குவாரியை மூட வலியுறுத்தி சுட்டெரிக்கும் வெயிலில் எம்எல்ஏ தலைமையில் சாலை மறியல் போராட்டம்

புதுக்கோட்டை அருகே உள்ள நார்த்தாமலையில் பொது மக்களுக்கு சுகாதார சீர்கேட்டை உண்டாக்கும் வத்தனாகுறிச்சி எம்எம் கல்குவாரியை மூட வலியுறுத்தி கந்தர்வகோட்டை எம்எல்ஏ சின்னதுரை தலைமையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் திருச்சி புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்