புதுக்கோட்டை இயற்கை விவசாயிகள் உற்பத்தியாளர் நிறுவனம் மற்றும் நபார்டு கிராம அங்காடி திறப்புவிழா புதுக்கோட்டை பெரியார்நகரில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர். முத்துராஜா தலைமை தாங்கினார். நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி அதிகாரி ஜெயஸ்ரீ முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதாராமு கலந்துகொண்டு, நபார்டு கிராம அங்காடி திட்டத்தின் கீழ் புதுக்கோட்டை இயற்கை விவசாயிகள் உற்பத்தியாளர் கம்பெனி மூலம் நடத்தப்படும், இயற்கை பாரம்பரிய உணவுப்பொருட்கள் விற்பனை அங்காடியை குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார். அப்போது, பேசிய மாவட்ட கலெக்டர் கவிதாராமு, இயற்கை உரங்களை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் இதுபோன்ற உணவுப்பொருட்களை அனைவரும் பயன்படுத்த முன்வர வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
சிறுவயதிலேயே குழந்தைகளுக்கு இதுபோன்ற இரசாயண உரங்கள் பயன்படுத்தாத, இயற்கையான முறையில் உற்பத்தி செய்யப்பட்ட
உணவுப்பொருட்களால் தயாரிக்கப்பட்ட திண்பண்டங்களை சாப்பிட பெற்றோர்கள் பழக்கப்படுத்த வேண்டும் என்றும் இது நோயற்ற வாழ்வு வாழ வழிவகுக்கும் என குறிப்பிட்டார்.
இந்த அங்காடியில் மாப்பிள்ளைச்சம்பா, தூயமல்லி, கவுனி போன்ற பல்வேறு வகையான பாரம்பரிய அரிசிகளும்,வரகு, குதிரைவாலி, சாமை போன்ற சிறுதானியங்களும், சிறுதானியம் மற்றும் பாரம்பரிய அரிசியில் செய்த அதிரசம், முறுக்கு, மிக்சர், காராசேவ், மனோவளம், லட்டு போன்ற தின்பண்டங்கள் உள்ளிட்ட பல்வேறு உணவுப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக நிறுவனத்தினா; தொpவித்தது மகிழ்ச்சி அளிக்கின்றது.
நிகழ்ச்சியில் முதல் விற்பனையை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தொடங்கி வைக்க, எம்.எல்.ஏ முத்துராஜா, நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி அதிகாரி ஜெயஸ்ரீ, புதுக்கோட்டை நகர் மன்றத்தலைவர் திலகவதி செந்தில் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.