இன்றைய புதுக்கோட்டை மாவட்ட செய்திகள் தேதி : 02.5.22
ஆய்வு : ஆவுடையார்கோவில் ஒன்றியத்திற்கு உட்பட்ட முத்துக்குடா கடற்கரை பகுதியில் அமைந்துள்ள அலையாத்திக் காடுகளை அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி ராமச்சந்திரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்…!!!
புதிய அலுவலகம் : புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்ற தொகுதி அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம் மறமடக்கி ஊராட்சியில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் அமைப்பதற்கான பணிகளைத் தொடங்கி வைத்தார் மாண்புமிகு அமைச்சர் சிவ.வீ மெய்யநாதன்.,
பவர் டில்லர் : தமிழ்நாடு அரசு தோட்டக்கலை மலைப்பயிர்கள் துறை சார்பாக கூட்டுப்பண்ணை திட்டத்தின் மூலம் விவசாய குழுக்களுக்கு மாண்புமிகு தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி Bsc,BL,. அவர்கள் பவர் டில்லர் இயந்திர வழங்கி சிறப்பித்தார்
இலவச ஆம்புலன்ஸ் சேவை : புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தொகுதி கடியாபட்டிக்கு காமதேனு பாபா டிரஸ்ட் மற்றும் KKBT ஊழியர்கள் வழங்கிய இலவச ஆம்புலன்ஸ் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார் மாண்புமிகு தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி Bsc,BL,. அவர்கள்
ஆர்ப்பாட்டம் : பொன்னமராவதியில் விவசாய தொழிலாளர் சங்கம் சார்பாக மனு கொடுக்கும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பாக மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. அதில் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டம் (தமிழ்நாடு அர்பன் எம்பிளாய்மெண்ட் ஸ்கீம்) GO M.S (NO.69-2021-ன்படி பொன்னமராவதி பேரூராட்சியை இணைத்து பேரூராட்சி பகுதியில் வாழும் ஏழை எளிய மக்களுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் வேலை கேட்டு பொன்னமராவதி பேருந்து நிலையம் அருகே ஒன்று கூடி பொன்னமராவதி நகர்ப்பகுதிகளில் வசிக்கக்கூடிய 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்தனர். அதனைத் தொடர்ந்து பேரூராட்சிக்கு ஊர்வலமாக நடந்து சென்றனர். அப்போது தமிழக அரசு அறிவித்த படி நகர்ப்புற ஏழை எளிய மக்களுக்கு 100 நாள் திட்டத்தில் வேலை வாய்ப்பை வழங்க வேண்டும் என்று வீர முழக்கமட்டவாறு சென்றனர். பொன்னமராவதி பேரூராட்சி செயல் அலுவலர் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். பின்னர் பேசிய செயல் அலுவலர் பொன்னமராவதி பேரூராட்சிக்கு 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் அறிவிக்கப்பட்டால் அத்திட்டத்தின் மூலமாக தங்களுக்கு 100 நாள் வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்றார்..
மறியல் போரட்டம் : புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே செயல்படும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் கல்லூரி நேரத்தில் கூடுதல் பேருந்து இயக்க கோரி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.