கிராம சபை கூட்டம்..

664

புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புதுக்கோட்டை ஒன்றியம் 9A நத்தம்பண்ணை ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் நடைபெற்ற மே தின சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு தீர்மானங்களை நிறைவேற்றி பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்த புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மதிப்புமிகு டாக்டர் வை.முத்துராஜா அவர்கள் இந்நிகழ்வில் ஊராட்சி மன்ற தலைவர் துணைத் தலைவர் மற்றும் வார்டு மெம்பர்கள் அரசு அதிகாரிகள் கழக நிர்வாகிகள் பொது மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

வடகாடு ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் S.மணிகண்டன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

திருமயம் ஒன்றியம் லெம்பலகுடியில் சட்டத்துறை அமைச்சர் S.ரகுபதி தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

அரிமளம் ஊராட்சி ஒன்றியம்
இராயவயம் ஊராட்சி புதுக்கோட்டை.மாண்புமிகு தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி Bsc,BL. அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்,மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்ற தொகுதி திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் குப்பகுடி ஊராட்சியில் நடைபெற்ற மேதின சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் மாண்புமிகு அமைச்சர் சி.வ.வீ மெய்யநாதன் கலந்து கொண்டு தீர்மானங்களை நிறைவேற்றி பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்தார்

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஊராட்சி ஒன்றியம் சமுத்திரம் ஊராட்சியில் தாஞ்சூரில் நடைபெற்ற மே தின கிராம சபை கூட்டத்தில் மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம் அப்துல்லா மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பெரியண்ணன் அரசு கலந்துகொண்டனர்

இன்று உழைப்பாளர் தின கிராம சபை கூட்டம் முள்ளூர் கிராம பஞ்சாயத்தில் நடைபெற்றது..

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஒன்றியம், இளஞ்சாவூர் ஊராட்சியில் கிராமசபை சிவகங்கை பாரளுமன்ற உறுப்பினர் சி.கார்த்திக் சிதம்பரம் மற்றும் முன்னாள் எம்எல்ஏ கூட்டத்தில் கலந்து கொண்டனர்

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஒன்றியம், புள்ளான்விடுதி ஊராட்சியில் கிராமசபை கூட்டத்தில் சிவகங்கை பாரளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் கலந்து கொண்ட போது.