புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள பட்டமரத்தான் நினைவாலயத்தில் 62 ஆம் ஆண்டு பூச்சொரிதல் விழா நடைபெற்றது.
பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு பட்டமரத்தான் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. பின்பு பொன்னமராவதியை சுற்றியுள்ள நாட்டுக்கல், பாலமேடு வீதி, வலையபட்டி ஐந்தாம் நம்பர் ரோடு, பெரியார் நகர், செவன் ஸ்டார் நண்பர்கள், பூக்குடி வீதி மற்றும் பாண்டிமான் கோவில் வீதி உள்ளிட்ட பல்வேறு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் பூத்தட்டு மற்றும் பால்குடம் எடுத்து வந்து சுவாமிக்கு பால் அபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பூத்திருவிழாவிற்கான ஏற்பாடுகளை பட்டமரத்தான் விழாக்குழுவினர் செய்திருந்தனர். திருவிழாவை முன்னிட்டு இன்னிசை கச்சேரி, கலைநிகழ்ச்சி, பட்டிமன்றம், நாடகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பாதுகாப்பு ஏற்பாடுகளை பொன்னமராவதி போலீசார் செய்திருந்தனர்