புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

462

இன்றைய புதுக்கோட்டை மாவட்ட செய்திகள் தேதி: 30.4.22

ஆழ்துளை கிணறு : புதுக்கோட்டை நகராட்சி பகுதிகளில் 13 இடங்களில் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி அப்துல்லா எம்பி தொடங்கி வைத்தார்.புதுக்கோட்டை நகராட்சி பகுதிகளில் குடிநீர் பிரச்சினையை தீர்க்கும் வகையில் 13 இடங்களில் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கும் பணியினை அப்துல்லா எம் பி தொடங்கி வைத்தார் முன்னதாக சமத்துவபுரம் நரிமேடு பகுதிகளிலும் ஆழ்துளை கிணறுகள் அமைக்கும் பணிக்கு பூஜை போடப்பட்டு பணிகள் தொடங்கியது இந்நிகழ்ச்சியில் நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் அப்துல்லா நகர்மன்ற தலைவர் திலகவதி செந்தில் நகர்மன்ற துணைத்தலைவர் லியாக்கத் அலி நகராட்சி நியமன குழு உறுப்பினர் வளர்மதி சாப்டியா நகர செயலாளர் நைனா முகமது கவுன்சிலர்கள் மதியழகன் மற்றும் பழனிவேலு ஆணையர் நாகராஜன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

நலத்திட்ட உதவி : புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு கட்டுமான நலவாரிய தொழிலாளர்களுக்கு நல வாரியத்தலைவர் பொன்குமார் இன்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார் இந்நிகழ்ச்சியில் கலெக்டர் கவிதா ராமு உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டனர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த கட்டிட தொழிலாளர்களுக்கு உபகரணங்கள் நலத்திட்ட உதவிகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டது

ஜல்லிக்கட்டு : புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி கல்லாலங்குடி ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் ஜல்லிக்கட்டு போட்டியை சிவ.வீ மெய்யநாதன் தொடங்கிவைத்தார்.

தீ தடுப்புபயிற்சி : அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் தீயணைப்பு துறை சார்பாக செயல்முறை விளக்கப் பயிற்சி நடைபெற்றது

வினோத போராட்டம் : புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் இரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வலியுறுத்தி தீச்சட்டி ஏந்தி பால்குடம் காவடி முளைப்பாரி எடுத்து‌ சிலம்பு சுற்றி ஊர்வலமாக சென்ற‌ மக்கள் சமபந்தி விருந்து வைத்து நூதன முறையில் தங்களது கோரிக்கையை வலியுறுத்தினர்.

தீவிர சிகிச்சை : புதுக்கோட்டையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனை முத்துமீனாட்சி மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வரும் மாநில வர்த்தக சங்க துணை பொதுச்செயலாளரும், புதுக்கோட்டை பேக்கரி மஹராஜ் நிறுவனருமான சீனு சின்னப்பா அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார்.. தவத்திரு குன்றக்குடி அடிகளார், திருச்சி பாரளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், மற்றும் புதுக்கோட்டை முக்கிய பிரபலங்கள் சந்தித்து நலம் விசாரித்தனர்.