புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

628

இன்றைய புதுக்கோட்டை மாவட்ட செய்திகள் தேதி : 28.04.22

புதுக்கோட்டை நகராட்சியில் 5 வருடமாக சரி செய்யாமல் இருக்கும் குப்பை வண்டிகள் சரி செய்து பயன்பாட்டிற்கு வந்ததை ஆய்வு செய்த நகர்மன்ற தலைவர் நகர்மன்றத் துணைத் தலைவர் நகராட்சி ஆணையர் மற்றும் ஆய்வாளர்கள்.

ஆலங்குடியில் மது விற்ற இருவர் கைது : ஆலங்குடி அரசமரம் அருகில் மது விற்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் ஆலங்குடி காவல் சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையில் ரோந்து பணியில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது மேலகரும்பிரான்கோட்டையை சேர்ந்த வடிவேல் (வயது 50). இவர் ஆலங்குடி உள்ள கடைவீதியில் 140 மது பாட்டிலுடனும் மற்றும் ஆலங்குடி கம்பர் தெருவைசேர்ந்த ராஜேந்திரன் (வயது 52) அரசமரம் மதுக்கடை அருகே 8 மது பாட்டில்களுடன் இருவரும் திருட்டுத்தனமாக மது விற்பனை செய்து கொண்டிருந்தனர். இவர்களிடமிருந்து 148 மது பாட்டில்களுடன் அவர்களை கைது செய்து போலீசார் காவல் நிலையம் அழைத்து வந்தனர். மேலும் போலீசார் வடிவேல் என்பவரை வழக்குபதிவு செய்து ஆலங்குடி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி நல்லக்கண்ணன் முன்பு ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.

திருமயம் – லெம்பலக்குடியில் வாகன விபத்து ஒருவர் பலி : திருமயம் தாலுகா லெம்பலக்குடிக்கு அருகே உள்ள அம்மினிப்பட்டி கண்மாய் சாலையில் டிப்பர் லாரி மோதி இருசக்கர வாகனத்தில் வந்த அடைக்கலம் என்ற நபர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இது தொடர்பாக நாமுணசமுத்திர காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர் லாரி ஓட்டுனரும்,உயிரிழந்தவரும் ஒரே ஊரே சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது

புதுக்கோட்டை திருக்கோயில் ஸ்ரீ பிரகதாம்பாள் என்ற அரைக்காசு அம்மன் கோகர்ணேஸ்வரர் ஆலயத்தில் இன்று காலை ருத்ர ஜப ஹோமங்கள் நடைபெற்று மஹா தீபாராதனை காட்டப்பட்டு சிறப்பித்தனர். மேலும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மன் சுவாமி அருள் பெற்று சென்றனர்.