புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

1147

இன்றைய புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்  தேதி :29.04.22

பொன்னமராவதி பட்டமரத்தான் கோயிலில் பூச்சொரிதல் திருவிழாவை முன்னிட்டு லட்சார்ச்சனை விழா : பொன்னமராவதியில் உள்ள பட்டமரத்தான் கோவிலில் பூச்சொரிதல் திருவிழாவை முன்னிட்டு முதல் நாளான்று லட்ச அர்ச்சனை நடைபெறும். அதில் நிகழாண்டு லட்ச அர்ச்சனை நேற்று அதிகாலை 5.00 மணிக்கு பட்டமரத்தான் கோயில் லட்ச அர்ச்சனை தொடங்கியது. இதில் பரணி குருக்கள் தலைமையில் சிவாச்சாரியார்கள் பங்கேற்று வேத மந்திரங்க முழங்க லட்ச அர்ச்சனை நடைபெற்றது. முன்னதாக பட்டமரத்தான் சாமிக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. விழாவில் பொன்னமராவதி சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று பட்டமரத்தான் சாமியை வழிபட்டனர். பக்தர்கள் அனைவருக்கும் எஸ்.டி.கே.ஆர் குடும்பத்தார்கள் அன்னதானம் வழங்கினர்.

புதுக்கோட்டை பெரியார் நகர் டபுள் ரோடு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 121 பவுன் நகை கொள்ளை சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் திருமண நாளன்று பெரியார் நகர் மனோன்மணி என்பவரது வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் குற்றவாளிகள் சிவராஜன் தங்கபாண்டி சதீஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டு 61 பவுன் நகை மீட்கப்பட்டுள்ளது இதுதொடர்பாக நகர காவல் துணை கண்காணிப்பாளர் லில்லி கிரேஸ் மற்றும் நகர காவல் ஆய்வாளர் குருநாதன் ஆகியோர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்

ஜல்லிக்கட்டு : புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள சீமானூரில் அய்யனார் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு விறுவிறுப்பாக நடைபெற்றது.