புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

964

இன்றைய புதுக்கோட்டை மாவட்ட செய்திகள் தேதி : 27.04.22

கொரோனா : புதுக்கோட்டை மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் புதுக்கோட்டை நகராட்சி நகர்மன்ற தலைவர் துணை தலைவர் நகர் மன்ற உறுப்பினர்கள் சுகாதாரதுறை அலுவலர்கள் மற்றும் நகராட்சி பொறியாளர் அவர்களுக்கு நடைபெற்ற கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பற்றிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

மஞ்சுவிரட்டு: புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள துளையானூர் மங்கள நாச்சியம்மன் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில் காளையர்களை புரட்டிப்போட்டு துள்ளிக் குதித்த காளைகள், பார்த்து ரசித்த பார்வையாளர்கள்.காளைகள் முட்டியதில் 10க்கும் மேற்பட்டோர் காயம்.

மது எடுப்பு திருவிழா : புதுக்கோட்டை அருகே உள்ள பெருங்களூர் பிடாரி அம்மன் கோயில் மது எடுப்பு திருவிழா ஆயிரக்கணக்கில் திரண்ட பக்தர்கள்.

தூய்மை பணி : மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தூய்மை பணிகளை ஆய்வு செய்தார் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் …

நகர்மன்ற கூட்டம் : புதுக்கோட்டை நகராட்சி கூட்ட அரங்கில் நகராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான சாதாரண கூட்டம் வரும் 29.04.22 வெள்ளி கிழமை நடைபெறவுள்ளது – நகராட்சி தலைவர் அறிவிப்பு.

அதிமுக மாவட்ட செயலாளர் :புதுக்கோட்டை வடக்கு மாவட்ட கழக செயலாளராக மீண்டும் தேர்வு செய்யப்ட்டுள்ள அதிமுக கழக அமைப்பு செயலாளர், முன்னாள் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தெற்கு மாவட்ட செயலாளராக பி.கே.வைரமுத்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கால்நடை பராமரிப்புத்துறை உதவியாளர் பணிக்கான நேர்காணல் ஒத்திவைப்பு
கால்நடை பராமரிப்புத்துறை மூலம் கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கான நேர்காணல் 28.04.2022 முதல் 30.04.2022 முடிய நடைபெற இருந்த நிலையில், தற்போது தமிழக அரசின் உத்தரவு படி நிர்வாக காரணங்களால் இந்த நேர்காணல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது..

மண்டல இணை இயக்குநர் கால்நடை பராமரிப்புத்துறை புதுக்கோட்டை
மாவட்ட ஆட்சித்தலைவர் புதுக்கோட்டை