புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

2017

இன்றைய புதுக்கோட்டை மாவட்ட செய்திகள் தேதி : 26.04.22

திருவிழா : புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி வேகுப்பட்டி ஏனமாரியம்மன் கோயிலில் தொடங்கிய சித்திரை திருவிழாவில் பக்தர்கள் அக்கினி குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

மறியல் : புதுக்கோட்டை நகர பகுதிக்கு உட்பட்ட போஸ்நகரில் கடந்த 15 தினங்களாக குடிநீர் வழங்காததை கண்டித்தும் உடனடியாக குடிநீர் வழங்க வலியுறுத்தி அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் நேற்று காலி குடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வானவேடிக்கை : புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக விண்ணதிரும் வெடிச்சத்தம், வாணவேடிக்கை என கோலாகலமாக நடைபெற்ற வடகாடு முத்துமாரியம்மன் கோயில் தேரோட்ட திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.

தூய்மை பணியாளர்கள் : புதுக்கோட்டையில் கடந்த நான்காண்டுகளாக 3 ஆயிரம் ரூபாய் ஊதியத்தில் பணி புரிந்து வரும் தங்களுக்கு ஊதியத்தை உயர்த்தி பணிநிரந்தரம் செய்ய கோரி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் அரசு விடுதிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் மனு அளித்தனர்.

அறந்தாங்கி அருகே அரசு பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதல் – லாரி டிரைவர் சம்பவ இடத்திலேயே பலி:

அறந்தாங்கி அருகே எரிச்சி கிராமத்தை சேர்ந்தவர் முகமது மகதீர் (32) லாரி டிரைவர் இவர் அரசுக்குச் சொற் மான நெல் குடோனில் நெல்லை ஏற்றிக்கொண்டு அறந்தாங்கி புதுக்கோட்டை சாலையில் குன்னக்குரும்பி அருகே வந்தபோது திருப்பூர்ரிலிருந்து அறந்தாங்கி வந்த அரசு பேருந்து மோதியது இதில் சம்பவ இடத்திலேயே லாரி டிரைவர் முகமது மகதீர் உயிரிழந்தார்.


அதன் பின்னர் லாரியின் முகப்பில் உட் பகுதியில் சிக்கியிருந்த டிரைவரின் உடலை தீயணைப்பு துறையினர் மீட்டனர் மீட்கப்பட்ட உடலை அறந்தாங்கி டிஎஸ்பி தினேஷ் குமார் தலைமையில் உடலை கைப்பற்றி அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் அரசு பஸ்சில் பயணம் செய்த 13 பேருக்கு காயம் ஏற்பட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் இதுகுறித்து அறந்தாங்கி டிஎஸ்பி தினேஷ்குமார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார் விபத்து காரணமாக அறந்தாங்கி – புதுக்கோட்டை சாலையில் 2மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது

பொன்னமராவதி அருகே ஏனாதி ஊராட்சியில் வீடு கட்ட வானம் தோண்டும்போது 7 ½ பவுண் பழங்கால தங்க நாணயம் கண்டெடுப்பு.