புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

474

இன்றைய புதுக்கோட்டை மாவட்ட செய்திகள் தேதி : 25.04.22

புதுக்கோட்டை: அறந்தாங்கி அருகே தொழிலதிபரின் கழுத்தறுத்து கொலை செய்து அவரது மனைவியிடம் கத்தி முனையில் 100 சவரன் நகை மற்றும் ரூ.20 ஆயிரம் கொள்ளை.
கொலை செய்யப்பட்ட நபர் 52 வயதான முன்னாள் ஜமாத் தலைவர் முகமது நிஜாம் – மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு.

வாந்தி மயக்கம் : புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் பிறந்தநாள் கேக் உண்ட 3 குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குளத்தில் மூழ்கி பலி : புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் குளத்தில் குளிக்கச் சென்ற போது நீரில் மூழ்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

செல்போனில் வந்த வினை : புதுக்கோட்டையில் நண்பர்களுடன் ஜாலியாக குளத்தில் குதித்து மொபைல் போனில் வீடியோ பதிவு செய்ய முயன்ற 17 வயது இளைஞர் நீரில் மூழ்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மக்கள் வெள்ளத்தில் மிதந்த ‘நமணசமுத்திரம்’ ரயில் நிலையம்!

ஏறக்குறைய 02 ஆண்டுகளுக்கு பிறகு இன்று முதல் 06126/25 காரைக்குடி-திருச்சி-காரைக்குடி டெமு ரயில் ‘#நமணசமுத்திரம்’ ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என்பதால் காலை 07:35 மணிக்கு நமனசமுத்திரம் ரயில் நிலையத்திற்கு வந்த 06126/’திருச்சி’ டெமு ரயிலுக்கு ‘நமனசமுத்திரம்’ பகுதி மக்கள் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர். மேளதாளங்கள் முழங்க மக்கள் வெள்ளத்தில் #நமணசமுத்திரம் ரயில் நிலையத்திலிருந்து இன்று(25/04/22) காலை 07:39 மணியளவில் திருச்சி நோக்கி புறப்பட்டது டெமு ரயில்.