புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

664

இன்றைய புதுக்கோட்டை செய்திகள் தேதி:24.4.22

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா மிரட்டுநிலை பெரிய கண்மாய், வேம்பன் முகுந்தன் ,செங்குளம், வண்ணான்குண்டு, மற்றும் பிடாரி குளம் கண்மாய் ,வரத்து வரி தூர்வாரும் பணியை தொடங்கிவைத்து மாண்புமிகு தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி மற்றும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்

கிராம சபை கூட்டம் : புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், கவிநாடு கிழக்கு ஊராட்சி, ஆட்டாங்குடியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கவிதா ராமு, இ.ஆ.ப., அவர்கள் மற்றும் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை.முத்துராஜா ஆகியோர் இன்று (24.04.2022) சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டனர் இக்கூட்டத்தில் மக்களின் பல்வேறு கோரிக்கைகளை கேட்டறிந்தனர் உடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜி.கருப்பசாமி, ஒன்றியக்குழுத் தலைவர் பி.சின்னையா, ஊராட்சிமன்ற தலைவர் ரெங்கம்மாள் பழனிச்சாமி, வட்டார வளர்ச்சி அலுவலர் குமாரவேல், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் உள்ளனர்

ஆக்ரமிப்பு அகற்றம் : புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே 80 ஏக்கர் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் அகற்றும் பணியை தொடங்கியுள்ளது சமூக ஆர்வலர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

ஜல்லிக்கட்டு போட்டி : புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள சங்கம்விடுதியில் நொண்டி முனியாண்டவர் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு விறுவிறுப்பாக நடைபெற்றது 700 காளைகள் மற்றும் 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.

மோசடி: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியைச் சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியையிடம்
50 லட்சம் ரூபாய் வங்கி கடன் வாங்கி தருவதாக கூறி ஒரு லட்ச ரூபாய் மோசடி செய்த வடமாநில கும்பல் மீது புதுக்கோட்டை சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மீன் பிடி திருவிழா : புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே மைலாப்பூர் கிராமத்தில் உள்ள சின்ன குட்டை கண்மாயில் மீன் பிடி திருவிழா, பொதுமக்கள் கண்மாயில் இறங்கி போட்டி போட்டுக்கொண்டு மீன்களை பிடித்தனர்.