இன்றைய புதுக்கோட்டை மாவட்ட செய்திகள் தேதி :23.04.22
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் இன்று நடைபெற்றது கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கவிதாராமு தலைமையில் நடைபெற்றது.. இந்நிகழ்வில் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் அவர்களும், மாநிலங்களவை உறுப்பினர் அவர்களும், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களும், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அவர்களும், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் அவர்களும், கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் அவர்களும், காவல் கண்காணிப்பாளர் அவர்களும், அரசு பிரதிநிதிகளும், அரசு உயர் அதிகாரிகளும் மற்றும் அரசு அலுவலர்களும் பங்கேற்றனர்.
மீன்பிடி தடைக்காலம் எதிரொலியால் கட்டுமாவடி மார்க்கெட்டில் மீன்களின் விலை கணிசமாக உயர்ந்தது.தமிழகத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் மீன்களின் இனப்பெருக்க காலமாக கருதி விசைப்படகு மூலம் கடலுக்கு சென்று மீன் பிடிக்க தமிழக அரசால் தடை விதிக்கப்படும்.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அவுடைநாயகி சமேத ராஜ ராஜ சோழீஸ்வரர் ஆலயத்தில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு மகா ருத்ர யாகமும் சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யபட்டு வெள்ளி அங்கி சாத்தி சிறப்பு வழிபாடு நடந்தது இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் இதில் ஏராளமான பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கபட்டது
உழவர் கடன் அட்டை பெற சிறப்பு முகாம் நாளை (24/04/2022) முதல் 1-ந் தேதி வரை நடைபெறுகிறது.
இந்திய அரசின் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையால், “உழவர்களுடனான கூட்டிணைவே நமது முன்னுரிமை” என்கிற சிறப்பு முகாம் நாடு முழுவதும் நாளை (ஞாயிற்றுக் கிழமை) முதல் வருகிற 1-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதுவரை உழவர் கடன் அட்டை பெறாத விவசாயிகள் இந்த முகாம்களில் விண்ணப்பிக்கலாம். உழவர் கடன் அட்டை திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயிர் கடனாக ரூ.3 லட்சம் வரையிலும், பால் பண்ணை, கால்நடை பராமரித்தல், மீன் வளர்ப்பு போன்ற வேளாண் உபதொழில் செய்வோர்க்கு ரூ.2 லட்சம் வரையிலும் வங்கிக்கடன் பெற முடியும். இத்திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக ரூ.3 லட்சம் வரை கடன் பெற லாம். உழவர் அட்டை மூலம் கடன் பெறும் விவசாயிகளிடம் 7 சதவீத வட்டி வசூலிக்கப்படும். மேலும், இக்கடன் பெற்ற விவசாயிகள் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் முறை யாக தவணை மாறாமல் திரும்ப செலுத்தினால் 3 சதவீதம் வரை வட்டி மானியம் பெறலாம். உழவர் கடன் அட்டை திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு ரூ.16 லட்சம் வரை எவ்வித பிணையமும் இன்றி கடன் வழங்கப்படும். இதுவரை உழவர் கடன் அட்டை பெறாத விவசாயிகள் அனைவரும் நாளை முதல் 1-ந்தேதி வரை ஊராட்சிகளில் நடைபெறவுள்ள சிறப்பு முகாமில் உழவர் கடன் அட்டையை பெற்று பயன் பெறுமாறு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் திருமதி கவிதாராமு தெரிவித்துள்ளார்.