புதுக்கோட்டை நகராட்சி:
வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த புதுக்கோட்டை நகராட்சியை சிறப்பு நிலைக்குத் தரம் உயர்த்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் மேலோங்கியுள்ளது.
ஆங்கிலேயர் காலத்தில் தனி சமஸ்தான அந்தஸ்துடன் திகழ்ந்த பெருமையுடையது புதுக்கோட்டை நகராட்சி 1912 ஆம் ஆண்டு மூன்றாம் நிலை நகர் ஆக தோற்றுவிக்கபட்டது. சமஸ்தானத்தில் இருந்த ஒரே நகராட்சியும்
இதுதான். அப்போது நகர்மன்றத்தில் 18 உறுப்பினர்கள் இருந்தனர்.
பின்பு 1963 ஆம் ஆண்டு முதல் நிலை நகராட்சி ஆகவும், 1998 ஆம் ஆண்டு தேர்வு நிலை நகராட்சி ஆகவும் தரம் உயர்த்தப்பட்டது.
புதுக்கோட்டை நகராட்சி கவிநாடு மற்றும் நத்தம்பண்ணை கிராமங்களை உள்ளடக்கியது.
புதுக்கோட்டை நகராட்சியின் பரப்பளவு சுமார் 21.95 சதுர கி.மீ. பகுதி. புதுக்கோட்டை தமிழ்நாட்டில் பண்டைய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகரங்களில் ஒன்றாகும். இது நன்கு திட்டமிடப்பட்ட நகரமாகும். இது 180 கிலோமீட்டர் நீளமுள்ள 425 தெருக்களைக் கொண்டுள்ளது.
சிறப்பு நிலை ஆகும் பட்சத்தில் அதன் பயன்கள்: இந்த நகராட்சி படிநிலை எதை குறிக்கிறது என்றால், நகராட்சி ஈட்டும் வருவாயை குறிக்கிறது.
2021 முன்பு வரை நகராட்சி வருவாய்,
4 கோடிக்கு கீழ் இருந்தால் இரண்டாம் நிலை நகராட்சி எனவும்,
4 முதல் 6 கோடி வரை இருந்தால் முதல் நிலை நகராட்சி என்றும்,
6 கோடி முதல் 10 கோடி வரை இருந்தால் தேர்வு நிலை என்றும்,
10 கோடிக்கு மேல் இருந்தால் சிறப்பு நிலை எனவும் பிரித்து வைத்து இருந்தனர்.
2021 ககு பிறகு இந்த காரணிகள் மாற்றப்பட்டது.
இரண்டாம் நிலை 6 கோடிக்கு கீழ்,
முதல் நிலை 6 – 9 கோடி,
தேர்வு நிலை 9 – 15 கோடி,
சிறப்பு நிலை 15 கோடி என மாற்றப்பட்டது.
இதில் புதுக்கோட்டை நகராட்சி வருவாய் கடந்த 4 ஆண்டுகளில்,
2017 – 18: 16.84 கோடி.
2018 -19 : 22.83 கோடி
2019 -20 : 18.34 கோடி
2020 – 21 : 16.95 கோடி ஆக உள்ளது.
சிறப்பு நிலை நகராட்சி காரணி பூர்த்தி செய்த பின்பும் இன்னும் தேர்வு நிலையில் தொடர்கிறது.
சிறப்பு நிலை நகராட்சி ஆக்கினால், கூடுதல் பணியாளர் பணியமர்த்த படுவார்கள் மற்றும் அரசிடம் இருந்து வரும் பகிர்மான நிதி அதிகரிக்கும்.
மேலும் இது மெல்ல மெல்ல நகரின் வருவாயை அதிகரித்து கொண்டே செல்லும். பின்னாளில் இது மாநகராட்சி ஆக கூட உதவலாம்.
மாநகராட்சி ஆக 3 லட்சம் மற்றும் 40 கோடி வருவாய் தேவை படும் நிலையில், நகரின் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 1.43 லட்சம் ஆக உள்ளது. மேலும் நகர் எல்லைக்குள் சில முக்கியபகுதிகள் இன்னும் இணைக்கப்படவில்லை. அவை அனைத்து இணையும் பட்சத்தில் அடுத்த 5 வருடத்திற்குள் புதுக்கோட்டை நகரம் மாநகராட்சி ஆக தகுதி அடைய வாய்ப்பு உள்ளது.
அதற்கு முன்பு புதுகை நகராட்சியை சிறப்பு நிலை நகராட்சி (பெரு நகராட்சி) ஆக மாற்ற வேண்டிய நிலை உள்ளது.
சிறப்பு நிலை நகராட்சி கிடைத்தால் என்ன பயன் என்றால்.
1. முதலில் மாநகராட்சி ஆக முதல் படியாக பார்க்கப்படும்.
2. பகிர்மான நிதி 12 கோடியில் இருந்து 20 கோடி வரை கிடைக்கும். இதன் மூலம் சில திட்டங்களை நகராட்சி சார்பாக நிறைவேற்றி கொள் முடியும்.
3. கூடுதல் பணியாளர்கள் கிடைப்பார்கள். இதன் மூலம் ஆள் பற்றாகுறை இருக்காது.
கொங்கு மண்டலம் பொறுத்த வரை கோவை, திருப்பூர் , சேலம், ஈரோடு ,ஓசூர் மற்றும் கரூர் போன்ற 6 மாநகராட்சி உள்ளது.
ஆனால் மத்திய மண்டலம் பொறுத்த வரை திருச்சி, தஞ்சை மற்றும் கும்பகோணம் என 3 மாநகராட்சி மட்டுமே உள்ளது. புதுக்கோட்டை சிறப்பு நிலை ஆனால், வருங்கால மாநகராட்சி எண்ணிக்கையில் மாற்றம் இருக்கலாம்.
புதுக்கோட்டை நகராட்சி 110 ஆண்டுகள் கடந்த நகராட்சி புதுக்கோட்டை நகரத்தை இன்றளவும் வளர்ச்சி பாதைக்கு எடுத்து செல்லாமல் உள்ளது புதுக்கோட்டை நகரவாசிகள் பெரும் சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.
புதுக்கோட்டை நகராட்சியின் ஆண்டு வருவாய் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பே ரூ. 22 கோடியை எட்டிவிட்டது. மக்கள்தொகையோ ஏறத்தாழ 1.43 லட்சம்(2011 census). புதுக்கோட்டை நகர்மன்றத்தில் தற்போது 42 உறுப்பினர்கள் உள்ளனர்.
கடந்த 2005-ல் சிறப்புநிலைக்கு உயர்த்த வேண்டும் என நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி நகராட்சி நிர்வாக இயக்குநர் அலுவலகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
இதே காலகட்டத்தில் திண்டுக்கல், உதகமண்டலம், கரூர் ஆகிய நகராட்சிகள் சிறப்பு அந்தஸ்தைப் பெற்றுவிட்டன. தற்போது அதில் திண்டுக்கல் மற்றும் கருர் மாநகராட்சி ஆகிவிட்டது.. ஆனால், புதுக்கோட்டை மட்டும் தரம் உயர்த்தப்படவில்லை இன்றளவும் தேர்வு நிலை நகராட்சியாகவவே உள்ளது.
கடந்த அரசும் புதுக்கோட்டை நகரை கண்டுகொள்ளவில்லை காரணம் எதுவாகவும் இருக்கலாம், ஆனால், அதைக்கூட செய்யவில்லை புதுக்கோட்டை மாவட்டத்தை புறக்கணிக்கப்படுகிறது என்பதென்னவோ உண்மை.
தற்போது புதுக்கோட்டை நகராட்சி நிர்வாகம் ஆளும் கட்சி வசம் இருக்கும் நிலையில், அதைச் சிறப்பு நிலைக்குத் தரம் உயர்த்துவது என்பது சாதாரணமான ஒரு விஷயம்.
புதுக்கோட்டையை விட சில சிறு நகரங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை விட புதுக்கோட்டை நகருக்கு கிடைப்பதில்லை. அரசின் பார்வையில் இன்றளவும் படவில்லை தமிழக அரசின் பார்வை இனி புதுக்கோட்டையின் மேல் பட்டால் மட்டுமே நகரம் வளர்ச்சி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
இந்நிலையில், புதுக்கோட்டை நகராட்சிக்கு சிறப்பு நிலை தகுதி ஏன் இன்னும் அரசு வழங்கவில்லை என்ற கேள்வி புதுக்கோட்டை நகரவாசிகளிடம் எழுந்துள்ளது.இனி நமது நகரத்தை வளர்ச்சி பாதைக்கு எடுத்து செல்ல வேண்டிய கட்டாயத்தில் அனைவருடைய பங்கும் அவசியமே ..
கட்டுரை உதவி தீபக்,சரண்