புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

844

இன்றைய புதுக்கோட்டை மாவட்ட செய்திகள் தேதி: 20.04.22

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அடுத்த மங்கனூர் புனித செபஸ்தியார் ஆலய தேர் திருவிழா கோலாகலம்.

புதுக்கோட்டை நகரத்திற்கு புதிய கூட்டு குடிநீர் திட்டம் சட்டமன்றத் கூட்ட தொடரில் அறிவிப்பு

புதுக்கோட்டை அதிமுக நகர புதிய நிர்வாகிகள் வடக்கு க.பாஸ்கர் மற்றும் எஸ் ஏ எஸ் சேட் அவர்கள் இன்று துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர் உடன் மாவட்ட செயலாளர் விஜயபாஸ்கர்.

பொன்னமராவதி அருகே நீர் இறைக்கும் போது கிணற்றுக்குள் தவறி விழுந்து மோட்டார் பைப்பை பிடித்துக் கொண்டு உயிருக்கு போராடிய மூதாட்டி… பத்திரமாக மீட்ட தீயணைப்புத்துறை

புதுக்கோட்டை அருகே ஒரே கிராமத்தைச் சேர்ந்த 15 படித்த பட்டதாரி இளைஞர்களிடம் விமான நிலையத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றி 18 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயை மோசடி செய்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது