நாகூர்-கொல்லம் ரயிலை மீட்ட புதுக்கோட்டை மண்ணின் மைந்தர்

741

நாகூர்-கொல்லம் ரயிலை மீட்ட மண்ணின் மைந்தர், வருகிறது நாகூர்-எர்ணாகுளம் ரயில்!

புதுக்கோட்டை வழியாக மீட்டர் கேஜ் பாதையில் நாகூர்-கொல்லம் இடையே பயணிகள் ரயில் ஒன்று இயங்கிவந்தது. திருச்சி-புதுக்கோட்டை பாதை அகல பாதையாக மாற்றுப்படுவதற்காக கடந்த 2004 இல் நிறுத்தப்பட்ட நாகூர்-கொல்லம் ரயில் ஏறக்குறைய 18 ஆண்டுகள் ஆகியும் மீண்டும் இயக்கப்படவில்லை.

இதனை மீண்டும் இயக்க நமது குழு மாண்புமிகு நமது பாராளுமன்ற உறுப்பினர் திரு.M.M.அப்துல்லா அவர்களில் கவனத்திற்கு கொண்டுசென்றது. இதனை ஆர்வமுடன் கேட்ட அவர் இந்த ரயிலை மீண்டும் இயக்க உரிய நடவடிக்கை எடுத்து புதுக்கோட்டை பகுதி மக்களின் உரிமை நிலைநாட்டப்படும் என்றும் உறுதியளித்திருந்தார். இது குறித்து சில நாளிதழ் செய்தி வெளியிட தயக்கம் காட்டியபோது “தி ஹிந்து தமிழ்” நாளிதழ் புதுக்கோட்டை மக்களின் கோரிக்கையை ஏற்று கடந்த ஆண்டின் இறுதியில் செய்தி வெளியிட்டது.

இந்த நாளிதழுக்கு பேட்டியலிருந்த நம்மவர் “இது குறித்து மதுரை கோட்டத்தில் நடைபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டத்தில் பேசியுள்ளேன், தென்னக மேலாளரும் இந்த ரயில் மீண்டும் புதுக்கோட்டை வழியாக இயக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார். விரைவில் புதுக்கோட்டை வழியாக நாகூர்-கொல்லம் ரயில் ஓடும் என்றார் “. இன்று சொன்னதை செய்துவிட்டார். நாகூர்-எர்ணாகுளம் இடையே திருவாருர்-திருச்சி-புதுக்கோட்டை-காரைக்குடி வழியாக 2 மாதங்களுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.

தற்போது சிறப்பு ரயிலாக இயக்கப்படும் இந்த ரயில் சில காலங்களிலேயே நிரந்தர ரயிலாக மாற்றப்படும் என்றே ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் மீட்டர் கேஜ் பாதையில் நாகூர்-கொல்லம் இடையே இயங்கிய ரயிலை நம்மவர் மீட்டு கொடுத்துள்ளார். இந்த ரயிலை மீண்டும் இயக்கவேண்டும் என்பது புதுக்கோட்டை மக்களின் நீண்ட நாள் கனவாகும். அந்த கனவு தற்போது நினைவாகியுள்ளது. மாண்புமிகு பாரளுமன்ற உறுப்பினர் திரு. #MmAbdulla அவர்களுக்கு #புதுக்கோட்டை மக்களின் சார்பாக கோடான கோடி நன்றிகள். நன்றி ஐயா!

பதிவு #Pudukkottairailusers