கிசான் கடன் அட்டை (KCC) KISAN CREDIT CARD

580

திட்டத்தின் நோக்கம்:

விவசாயம் செய்வதற்குரிய மூலதன தேவைகளான விதைகள்,உரங்கள், பூச்சி மருந்துகள் மற்றும் இதர விவசாய தேவைகளை பூர்த்தி செய்யவும், கால்நடை பராமரிப்பு மற்றும் மீன் வளர்ப்பிறப்பிற்கான நடைமுறை மூலதனக் கடனாகவும் வழங்கப்படுகிறது.இது ஒரு குறுகிய காலக் கடன்.

தகுதியுள்ள விவசாயிகள்: தனி நபர் விவசாயிகள்,கூட்டுப் பண்ணை விவசாயிகள்,குத்தகை விவசாயிகள்,உழவர் ஆர்வலர் குழுக்கள்,உழவர் சுய உதவிக்குழுக்கள்மற்றும் உழவர் உற்பத்தியாளர் குழுக்கள்.

கடன் பெற தேவையான ஆவணங்கள்: முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட KCC விண்ணப்ப படிவம் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஆதார் அட்டை நகல் பான் கார்டு நகல்(Pan Card) வங்கிக் கணக்கு புத்தக நகல் நில உரிமை ஆவண நகல்கள்

கடன் அளவு:நிலத்தின் அளவை பொறுத்தும் பயிர் செய்வதற்கான அவசர தேவைகளை கருத்தில் கொண்டு கடன் வழங்கப்படும்.இத்திட்டத்தின் கீழ் ஈட்டுறுதி இல்லாமல் ரூ.1.60 லட்சம் வரை வழங்கப்படும்.ரூ.1.60 லட்சத்திற்கு மேல் ரூ.3 லட்சம் வரை தங்க நகை அல்லது நில அடமானத்தின் பேரிலும் கடன் பெறலாம். திட்டத்தின் வழிகாட்டுதல்களின்படி தகுதியின் அடிப்படையில் கடன் வரம்பு

வட்டி விகிதம்: வட்டி விகிதங்கள் இந்திய ரிசர்வ் வங்கியின் அறிவிப்புகளுக்கு ஏற்ப மாறுதலுக்கு உட்பட்டவை. இத்திட்டத்தின் கீழ் கடனை முறையாக செலுத்தும் விவசாயிகளுக்கு அரசின் 2 சதவீத வட்டி மானியம் மற்றும் 3 சதவீத வட்டி ஊக்கத்தொகை விதிகளுக்குட்பட்டு அளிக்கப்படும்.

கடன் திருப்பி செலுத்தும் கால அளவு: அந்தந்த மாவட்டங்களில் சாகுபடி செய்யப்படும் பயிர்களுக்கு ஏற்ப ஆண்டுதோறும் கடனை திருப்பிச் செலுத்தும் கால அளவு மாநில தொழில்நுட்ப குழுவால் நிர்ணயிக்கப்படும்.இந்த கடன் அட்டையை ஒவ்வொரு ஆண்டும் புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.

விவசாயிகள் கடன் விண்ணப்பம் மற்றும் இதர இணை ஆவணங்களை நேரடியாக தங்கள் வங்கி கிளைகள்,தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள்,வேளாண்மை உதவி இயக்குநர் கால்நடை பராமரிப்புத்துறை,பால்வளத்துறை ஆகிய சம்மந்தப்பட்ட துறைகளில் ஏதேனும் ஒன்றில் சமர்பிக்கலாம்.

இதுவரை விவசாய கடன் அட்டை பெறாத விவசாயிகள்,விவசாயம் தொடர்புடைய தொழில் செய்வோர் அனைவரும் 24.04.2022 முதல் 01.05.2022 வரை நடைறுெம் முகாம்களிலும், வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் குறிப்பிட்ட தினங்களில் நடைபெறும் முகாம்களில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுகொள்ளபடுகிறார்கள்.

திருத்தியமைக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின்(RPMFBY) கீழ்

உங்கள் பயிர்களை காப்பீடு செய்வீர்!! பயன் பெறுவீர்!!